விருச்சிகம் ராசி, மே மாதம் ராசிபலன் 2023 / Viruchigam rasi may matham rasi palan 2023

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 6-ல் குரு
சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்,
எளிதில் முடிய வேண்டிய விஷயங்கள்
தாமதமாககூடிய நிலை உண்டாகும்.
எதிலும் சிக்கனமாக இருப்பது,
நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. 6-ல் ராகு, மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்பதால் தக்க நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனுகூலங்கள் ஏற்படும். உங்களுக்கு இருந்து வந்த
பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறைந்து சாதகமான பலன்கள் உண்டாகும். இந்த மாதம் பணக்கஷ்டத்திலிருந்து மீண்டு வர வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.