குரு தசையில் சுக்கிர புக்திக்கு இரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள்.
சுக்கிர பகவான் ஆட்சி, உச்சம், நட்பு, லாப பஞ்சம் ஸ்தானத்திலிருந்து தசாநாதனாகிய குரு பகவானுக்கு திரிகோணத்திலிருந்தால் நன்மையான பலன்களே நடக்கும் உத்தமர்களின் சேர்க்கை, செல்வச் செழிப்பு, பொன், பொருள் பூஷண அலங்காரம், பூமி, வீடு சேர்க்கை, உத்தியோக லாபம் ஏற்பட்டு சுக ஜீவனம் செய்வார்கள்.
ஆனால் புக்தி நாதனாகிய சுக்கிரன் பகை நீசத்திலிருந்து சனி, ராகு, கேது சம்பந்தமும், தசாநாதனாகிய குருவுக்கு மறைவு ஸ்தானத்திலுமிருந்தால் பந்த மித்திரர்களே பகைவர்களாவார்கள். இவர்கள் வழக்குகளில் ஈடுபட வேண்டியதாக ஏற்படும். பல தொல்லைகளும் கஷ்டங்களும் மனச் சாந்தியைக் கெடுக்கும்.