சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான அதிதேவதை ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிச்சயமாக ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்வது உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும் இதை நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டும் மறந்து விடக்கூடாது.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த ஒவ்வொருவரும் உங்களுக்கான இஷ்ட தெய்வம் இருப்பது போல உங்கள் நட்சத்திரத்திற்கென்று ஒரு கடவுள் இருக்கின்றார் என்றால் அவர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் என்பது நீங்கள் நினைவில் வைத்துக் கொண்டு எந்த ஒரு சுபகாரியம் செய்தாலும் தொழில் தொடங்கினாலும் கண்டிப்பாக ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு ஒரு பூஜை செய்துவிட்டு தொடங்குவது என்பது உங்களுக்கு வெற்றிகளையும் உயர்வையும் கொடுக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்வதிலிருந்து நீங்கள் விலகி விடக்கூடாது உங்கள் வாழ்நாள் முழுவதும் இதை மட்டும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.