உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் சிவபெருமான், சிவபெருமான் ஒருவரே உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த கூடியவர் முன்னேற்றக் கூடியவர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சிவபெருமானுக்கு உகந்த நாளாகிய திங்கட்கிழமை பிரதோஷ நாட்களில் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் விரதம் இருந்து விளக்கேற்றி வழிபாடு செய்வது ஒரு சிறப்பான நிகழ்வாக இருக்கும்.
வாரத்திற்கு ஒரு முறை மாதத்திற்கு ஒருமுறை வருடத்திற்கு ஒருமுறை சிவபெருமானை கண்டிப்பாக வழிபாடு செய்ய வேண்டும் நேரம் இருந்தால் தினம் தோறும் நேரம் இல்லை என்றால் மேற்கூறிய ஏதேனும் ஒரு நாட்களில் வழிபாடு செய்வது சிறப்பு.