மீனம் ராசி மே மாத ராசிபலன் 2023 / meenam Rasi may matham rasi palan 2023

அன்புள்ள மீனம் ராசி நேயர்களே வணக்கம், உங்கள் ராசிக்கு 2-ல் குரு சஞ்சரிப்பதால்
பொருளாதார நிலையும் சிறப்பாக
இருக்கும். உங்களுக்கு இருந்த கடந்த
கால பிரச்சினைகள் யாவும் குறைந்து
மகிழ்ச்சியும் மனநிம்மதியும் உண்டாகும்.
குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும்.
தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் உங்களின் நீண்ட நாள் விருப்பங்களும் நிறைவேறும். இந்த மாதம் வருமானங்கள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் வருமானத்திற்கு தகுந்த செலவுகளும் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது இதனால் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது.
செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுபகாரியங்கள் கைகூடும். மன சங்கடங்களில் இருந்து விடுபட்டு நல்ல மகிழ்ச்சியான மனநிலையை இந்த மாதம் நீங்கள் அனுபவிப்பீரகள்