தனுசு ராசி மே மாத ராசி பலன் 2023 / Dhanusu rasi may matham rasi palan 2023

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 5-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் எல்லாம் குறைந்து சகல விதத்திலும் வளமான பலன்களை பெறுவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடையும் யோகம் உண்டு. உங்களுடைய முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றியை அடைவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும்.