சிம்மம் மே மாதம் ராசி பலன் 2023 / Simmam may matham rasi palan 2023

அன்புள்ள சிம்மம் ராசி நேயர்களே வணக்கம், உங்கள் ராசிக்கு 3-ல் கேது மற்றும் 9-ல் குரு சஞ்சரிப்பது உங்களுக்கு அற்புதமான அமைப்பு என்பதால், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் உங்களுக்கு சாதகமானப் பலனைப் கொடுக்கும். சூரியன் 9 மற்றும் 10-ல் சஞ்சரிப்பதும், உங்களுக்கு சுக்கிரன் 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும், உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். சிறப்பான பணவரவால் உங்கள் மனம் பூர்த்தியாவதுடன் நவீனகரமான பொருட்சேர்க்கையும் வாங்க நேரிடும்.

● நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் மகாலட்சுமி தேவி