சாய் அப்பாவின் அருள் எப்போதும் அனைவருக்கும் இருக்கும் என்பதை உணர்த்தும் கதை | Shirdi Sai Baba Story in Tamil | Shirdi Sai Baba Stories in Tamil

சாய் பக்தர்களுக்கு வணக்கம் இன்று ஒரு குடும்பத்திற்கு சாய்பாபா கடவுளின் அருள் இருக்கின்றது என்பதை நிரூபித்த கதையை இன்று நாம் பார்க்கப் போகின்றோம்

ஒரு ஊரில் ஒரு குடும்பம் அவர்கள் சாய்பாபாவின் மீது மிகப்பெரிய பற்றுக் கொண்டவர்கள் தினம்தோறும் அவரை நினைத்து அவரைப் பற்றியே பேசி அவருடைய சொற்பொழிவை ஊர்முழுக்க பரப்பிக்கொண்டு இருக்கக்கூடியவர்கள் அப்படிப்பட்ட அவர்களுடைய வாழ்க்கையில் நான் உன்னுடன் இருக்கின்றேன் என்ற நிகழ்வை உணர்த்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்தது

ஒருநாள் அந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சொந்தமாக வீடு கட்டிக் கொண்டிருந்தனர் அப்போது பாதி வேளையில் அவர்களுக்கு பணப் பிரச்சனை ஏற்பட்டது அப்போது சாய் அப்பாவிடம் வாக்குவாதம் செய்தனர் சாய் அப்பா நீ தான் எனக்கு எல்லாம் உன்னை நம்பி தான் இந்த வீடு கட்ட ஆரம்பித்தேன் இப்போது பணத்தால் இந்த வீடு பாதியில் நின்று விடும் போல் இருக்கிறதே என்று அவரிடம் சண்டையிட்டு வேண்டிக் கொண்டிருந்தனர் அதை எப்படியோ சாய் அப்பாவின் காதில் பளிச்சென்று விழுந்துவிட்டது

ஒருநாள் அந்தக் குடும்பத்திடம் இருந்து ஒருவர் பணம் வாங்கியிருந்தால் சுமார் 20 ஆண்டுகள் கழித்து அந்த பணத்தை அவருக்கு தர அவர் வீடு தேடி வரும்படி சாய் அப்பா செய்துள்ளார்

ஆம் 20 ஆண்டுகளுக்கு முன் பணம் தரக்கூடாது என்று ஏமாற்ற நினைத்த அவர் தன்னுடைய மனம்மாறி எப்படியோ பணத்தை திருப்பிக் கொடுக்க அந்த குடும்பத்தை தேடி வெளி ஊரில் இருந்து வந்துள்ளார்

அந்த செய்தியை கேட்டவுடன் அந்த குடும்பத்திற்கு மகிழ்ச்சி குறையவில்லை உடனடியாக அந்த குடும்பமே சாய் அப்பாவிடம் போய் தன்னுடைய மன மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர் அந்த தருணத்தில் சாய் அப்பா தன்னுடன் இருப்பதை உணர்ந்தார் அதுமட்டுமல்லாமல் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

அந்த குடும்பம் ஒவ்வொரு முறையும் கஷ்டப்படும் போதும் சாய் அப்பா என்னோடு இருப்பதை உணரும் படி பல சம்பவங்களை நிகழ்த்தி இருக்கின்றன அதில் ஒன்றுதான் இப்போது நீங்கள் பார்த்தது

அன்றிலிருந்து இன்றுவரை சாய் அப்பாவுக்கு தொண்டு செய்யும் குடும்பமாகவே அந்த குடும்பம் மாறிவிட்டன