குழப்பமான மனநிலையில் இருந்து வெளியேவர தவறாமல் இதை செய்யுங்கள்
சாய் பக்தர்களுக்கு வணக்கம் தினமும் சாய் அப்பாவுடைய பொன்மொழிகளை பார்த்துக் கொண்டிருக்கின்றோம் அதில் இன்று
ஒரு மனிதருக்கு குழப்பமான மனநிலை எப்போது வரும் என்றால் ஒரு விஷயம் நினைத்தது நடக்காத போது எதிர்பார்த்த விஷயம் நடக்காத போது ஏதோ ஒரு பிரச்சனை ஏற்படும்போது மனநிலை குழம்ப செய்யும்
அப்படிப்பட்ட நேரத்தில் தெளிவான கண்ணோட்டத்தில் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்
எப்போதெல்லாம் நாம் வெகுளித்தனமாக இருக்கின்றோம் எப்போதெல்லாம் நம்மை சுற்றி இருக்கின்றவர்கள் நல்லவர்கள் என்று நினைக்கின்றோமோ அப்போதெல்லாம் நிச்சயமாக நாம் ஏமாற்றப்படுவோம் அதனால் மன குழப்பம் ஏற்படும்
ஏனென்றால் நம்மை சுற்றி இருக்கக் கூடியவர்கள் 100% நல்லவர்களும் அல்ல 100% கெட்டவர்களும் அல்ல ஏதோ ஒரு நேரம் காலம் அவர்களை தவறான வழியில் வழி நடத்தலாம் அதனால் இடம் பொருள் ஏவல் அறிந்து பழகக் கற்றுக் கொண்டால் நிச்சயமாக பல பிரச்சினைகளில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும்
இனியாவது உங்களுக்கு மன குழப்பம் ஏற்படும் போது மௌனமாக இருந்து விடுங்கள் சிலரிடம் பேசுவதைவிட மௌனமாக இருப்பது சில மனநிலை கடை சாந்தி படுத்தும் இதனால் நம்மால் தெளிவாக நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்டறிய முடியும்
ஓம் சாய் ராம்
