ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் படிப்புக்குப் பிறகு வேலை என்பது மிக மிக முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. பணம் கை நிறைய சம்பாதிப்பதற்காகத்தான் ஒவ்வொருவரும் படிக்கிறார்கள் அப்படி படித்து முடித்த உடனே அவர்களுடைய எண்ணம் என்னவாக இருக்கும் என்றால் ஒரு நல்ல கம்பெனியில் சேர்ந்து நல்ல விதமான சம்பளத்தை பெற்று நல்ல குடும்பம் நல்ல மனைவி நல்ல குழந்தைகள் என்று சந்தோஷமாக வாழ வேண்டும் என்று எண்ணத்தோடு பயணிக்கின்றார்கள். இது அவர்களை சொல்வதில் எந்த தவறும் இல்லை காரணம் என்னவென்றால் படிக்கக்கூடிய காலத்தில் இருந்தே நன்றாக படித்தால் நல்ல மதிப்பெண் கிடைக்கும் நன்றாக மதிப்பெண் எடுத்தால் நல்ல நல்ல கல்லூரியில் உங்களுக்கு அட்மிஷன் கிடைக்கும். நல்ல கல்லூரியில் நல்லக டிகிரி உங்களுக்கு கிடைத்தால் நல்ல வேலை கிடைக்கும் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று ஒவ்வொருவரும் நம் மனதிற்குள் அதையே சொல்லி சொல்லி நம்மை ஒரு இயந்திரம் போல் ஆக்கிவிட்டார்கள். அதனால் தான் அனைவரும் படித்து முடித்தவுடன் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த உடன் அடுத்தவர்களை தேடி வேலை கிடைக்கவில்லை என்று ரோடு ரோடாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக நாம் அடுத்தவர்களிடம் வேலை செய்வதை விட சுய தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நூற்றில் 20 பேருக்கு மட்டுமே உதிக்கிறது மீதி இருக்கக்கூடிய சதவீதம் மற்றவர்களிடம் வேலைக்கு சேர்ந்து பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணத்திலேயே கழிக்கின்றார்கள். இருக்கக்கூடிய மக்கள் தனியாக தொழில் தொடங்கி குறைந்த அளவு வருமானத்தை ஈட்டினாலும் சொந்த தொழில் என்ற மன நிம்மதியோடு குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்கிறார்கள். ஆம் நாம் அடுத்தவர்களிடம் கஷ்டப்படுவதை விட சொந்த தொழில் செய்து அதில் கஷ்டப்பட்டாலும் அதிக அளவு லாபத்தை பார்க்க முடியும் என்ற எண்ணத்தை மறந்து விடுகிறார்கள். ஆம் இன்று குறைந்த செலவில் அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய மிக ஈஸியான எளிமையான தொழிலை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.
1. முதலாவதாக நாம் பார்க்கக்கூடிய தொழில்
டீக்கடை நான்கு லிட்டர் பாலை வைத்து ஒரு சிலிண்டரை வைத்து குறிப்பிட்ட ஆயிரத்தில் இருந்து 1500 2000 வரை லாபத்தை ஒரு நாள் ஈட்ட முடியும் இது குறைந்த பட்சமாக சொல்லக்கூடிய விஷயம்.
2. இரண்டாவதாக மளிகை கடை
எந்த பொருளை வாங்கினாலும் குறைந்தபட்சம் 5 லிருந்து 10% லாபத்தை கம்பெனிக்காரரே கொடுக்கின்றார்கள் ஒரு சில கம்பெனிக்காரர்கள் 20% லாபத்தை மளிகை கடைக்காரர்களுக்கு தருகிறார்கள் அல்லது டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்திருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட offers கிடைக்கின்றன அதனால் தாராளமாக மல்லிகை கடையை திறக்கலாம்.
3. மூன்றாவதாக ஹோட்டல்.
ஹோட்டல் என்று எடுத்துக் கொண்டால் காலையில் டிபன் மதியம் லஞ்ச் இரவு பாஸ்போர்ட் இப்படி விதவிதமாக போடலாம் மினிமம் நீங்கள் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணால் குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய்வாவது சம்பாதிக்க முடிக்கும் குறைந்த செலவில் அதிக லாபத்தை காணக்கூடிய தொழிலாக இருக்கிறது.
4. உங்கள் வீட்டுக்கு அருகில் உங்களுடைய நிலம் இருந்தால் தாராளமாக கோழிப்பண்ணை வைக்கலாம்
இதிலிருந்து உங்களுக்கு மாதம் 40 ஆயிரத்திலிருந்து 50000 வரை லாபத்தை காண முடியும். முட்டையும் கம்பெனிக்காரரே கொடுக்கின்றார் கோழி வளர்வதற்கான மருந்தும் கம்பெனிக்காரர்களை கொடுக்கிறார்கள் உங்களுடைய வேலை கோழியை வளர்த்து 40வது நாள் கம்பெனிக்காரரிடம் கொடுத்தால் ஒரு கோழிக்கு பத்து ரூபாயிலிருந்து 15 ரூபாய் என்று கணக்கில் உங்களுக்கு தருவார்கள்.
5. காளான் பிசினஸ்
நம்ம ஊரில் இருக்கக்கூடிய ஏகப்பட்ட பெரிய பெரிய ஹோட்டல்களில் காளான் அதிகமாக வாங்கப்படுகிறது அதனால் தாராளமாக உங்களுடைய தோட்டம் இருந்தால் அதில் நீங்கள் காளான் பண்ணை வைத்து அதில் ஒரு லாபத்தை உங்களால் காண முடியும்.
மேலே சொன்ன அந்த ஐந்து விஷயங்களும் நிச்சயமாக மார்க்கெட்டிங் என்ற ஒரு விஷயத்தை நீங்கள் கையில் எடுத்து செய்யும் போது உங்களால் அதிக அளவு லாபத்தை காண முடியும் எந்த ஒரு தொழிலும் எளிமையாக அமைந்து விடாது முதலில் கஷ்டப்பட்டால் மட்டுமே பிறகு லாபத்தை உங்களால் காண முடியும் அதனால் தாராளமாக யாரோ ஒருவருக்கு மார்க்கெட்டிங் செய்து அவர்களுக்கு லாபம் ஈட்டுவதை தவிர்த்து விட்டு நீங்கள் சுயமாக தொழில் தொடங்கி உங்களுக்காக மார்க்கெட்டிங் செய்யும்போது அதில் அதிகப்படியான அக்கறை உங்களுக்கு கிடைக்கும் அது மட்டும் அல்லாமல் நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் அதிக லாபமும் கிடைக்கும்.





