சாய்பாபாவை வேண்டும்போது நம்முடைய வேண்டுதல் ஏன் தாமதமாகக் கொண்டு போகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சாய் பக்தர்களுக்கு வணக்கம் தினமும் சாய அப்பா பொன்மொழிகளை பார்த்துக் கொண்டிருக்கின்றோம் அதில் இன்று.

என் அன்பு குழந்தையே..

சாய் பக்தர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய வேண்டுதலை சாய் அப்பாவிடம் நிச்சயமாக வைத்திருப்பார்கள் அந்த வேண்டுதல் அவர்களுக்கு நடப்பதற்கு தாமதமாக இருக்கலாம் அந்த தாமதம் எதனால் ஏற்படுகிறது என்பதை பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாக சாய் அப்பாவிடம் நாம் ஒரு வேண்டுதலை வைக்கும்போது அது ஒரு நாளில் நடக்கலாம் ஒரு வாரத்தில் நடக்கலாம் அல்லது ஒரு மாதத்தில் நடக்கலாம் அல்லது ஒரு வருடத்தில் நடக்கலாம் அப்படியும் இல்லை என்றால் பத்து வருடம் 15 வருடம் கழித்துக் கூட நம் வேண்டுதல் பலிக்கலாம் இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால் நம்முடைய கர்மா. அந்த கர்மாவை பொறுத்து நமக்கு நல்லது நடப்பதும் எதிர்மறையான விஷயங்கள் நடப்பதும் நம் கையில் உள்ளது.

நம்முடைய கர்மா உனக்கு இந்த நேரத்தில் இதைக் கொடுக்க வேண்டும் என்று அதற்கு நன்கு தெரியும் அதுவரை நீ பொறுமையாக காத்துக் கொண்டிருக்கின்றாயா? நீ எதிர்பார்க்க விஷயம் உன்னிடம் சேரும்போது அதனுடைய அருமைகள் உனக்கு புரிய வேண்டும் என்பதற்காக சில காலங்கள் உன்னை காக்கும் வழி செய்யும். ஆனால் நிச்சயமாக நீங்கள் வேண்டுதலை வைக்கக் கூடிய விஷயம் ஒரு நாள் பலிக்கும் அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். ஆனா அந்த நாள் உங்களுக்கு வரும் வரை நீங்கள் பொறுமையாக காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமான ஒரு விஷயம்.

நம்முடைய கர்மா நமக்கு அதிகமாக இருக்கலாம். இந்த ஜென்மத்தில் நாம் யாருக்கும் எந்த விதமான எதிர்மறையான விஷயங்களை செய்யவில்லை, இருந்தாலும் நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது எல்லாமே தாமதமாக நடக்கிறது நான் வேண்டக்கூடிய ஒரு விஷயம் கூட எனக்கு நடக்கவில்லை என்று நாம் புலம்பினால் அது உண்மை அல்ல நிச்சயமாக ஒருநாள் நடக்கும் நம்ம கர்ம வினை அளவு குறையும்போது நாமே வேண்டாம் என்று சொன்னால் கூட நாம் ஆசைப்பட்ட விஷயம் ஆசை படாத விஷயம் எதுவாக இருந்தாலும் நம் கையில் வந்து சேர்ந்து விடும் அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம் அதுவரை பொறுமையாக நம்பிக்கையோடு காத்திருங்கள் சாய் அப்பா உங்களோடு இருக்கிறார்.

எப்போதுமே சாய் அப்பா தன்னுடைய பக்தர்களுக்கு கொடுக்கக்கூடிய பலன் எதுவாக இருந்தாலும் அந்தப் பலன் அவர்களுக்கு நன்மைகளை அளிக்கக் கூடிய வகையில் இருந்தால் மட்டுமே அந்த விஷயத்தை சாயப்பா செய்வார் அதைத் தாண்டி எதிர்மறையான விஷயங்கள் தன்னுடைய பக்தர்களுக்கு ஏற்படுகிறது என்றால் அந்த விஷயத்தை நாம் எத்தனை முறை வேண்டி வணங்கிக் கொண்டாலும், கேட்டுக் கொண்டாலும் அது நமக்கு நடப்பது மிக மிக மிக தாமதமாகும். அதனால் உனக்கு எது நன்மையோ அது சாயப்பாவுக்கு நன்கு தெரியும் அதை நிச்சயமாக உனக்கு தந்து உன் வாழ்க்கையில் செழுமை ஊட்டுவார். அதில் எந்தவித சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம்.

நம்பிக்கை பொறுமை இந்த இரண்டு நாணயங்களையும் சாய் அப்பா உங்களிடம் கொடுத்திருக்கிறார் நீங்கள் வேண்டுதலை வைக்கும்போது இந்த இரண்டு நாணயங்களையும் இரண்டு கையில் பிடித்துக் கொள்ளுங்கள் ஒரு கையில் பொறுமை ஒரு கையில் நம்பிக்கை நிச்சயமாக ஒரு நாள் நடக்கும் சாய் அப்பா  அவருக்கு நன்றி சொல்லிக்கொண்டு காத்திருங்கள் நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்த விஷயம் உங்களுக்கு நடக்கும்.

ஓம் சாய் ராம்...