பன்னிரண்டாம் வகுப்பு படித்த பிறகு எதை நாம் படித்தால் நமக்கு நல்லவிதமான சம்பளத்தோடு நாம் செல்வ செழிப்போடு வாழ முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள மறக்காமல் இதை படியுங்கள்

ஒவ்வொரு பிள்ளைகளும் 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு எதை படிக்க வேண்டும் எதைப் படித்தால் நாம் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதை பற்றி தெரியாத ஒரு புரிதல் இருக்கிறது. அதைப்பற்றி தான் நாம் இன்று இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகிறோம் பொதுவாக ஒரு பிள்ளைகள் படிக்கப் போகிறார்கள் என்றால் அவர்களுக்கு என்ன விருப்பம் இருக்கிறது என்பதை பற்றி நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இது பெற்றோர்களுடைய முதல் கடமை அந்த பிள்ளைக்கு எதை படிக்க வேண்டும் என்று விருப்பம் இருக்கிறதோ அதை நீங்கள் படிக்க வைத்தால் நிச்சயமாக அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள் அதை தவிர்த்து பிடிக்காத ஒரு படிப்பை நீங்கள் சேர்த்து விட்டால் அதில் அவர்களுக்கு மார்க் கம்மியாக எடுப்பார்கள். மதிப்பெண் கம்மியாக எடுக்கிறார்களே என்று நாம் வருத்தப்பட்டு கொண்டிருப்போம் அதனால் அவர்களுக்கு எந்த படிப்பில் விருப்பம் இருக்கிறது என்பதை தெளிவாக நாம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

சரி பொதுவாக இப்போது என்னென்ன படிப்புகள் படித்தால் நல்லவிதமான வேலைகள் கிடைக்கும் லட்சத்தில் சம்பளம் கிடைக்கும் என்பதை பற்றி நாம் இன்று இந்த பதிவில் அடுத்தடுத்து தெளிவாக பார்க்கலாம்.

1. முதலில் நாம் பார்க்கக்கூடிய படிப்பு மருத்துவர் ஆம் டாக்டர் படிப்பு என்பது மிக மிக உன்னதமான படிப்பு அந்த படிப்பு படிப்பதற்கு நாம் பத்தாம் வகுப்பிலிருந்து முடிவெடுத்து நல்ல குரு சேர்ந்து பிறகு 12-ம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்து அதன் பிறகு நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தால் இலவசமாக அரசாங்க மருத்துவ கல்லூரியில் நமக்கு அட்மிஷன் கிடைக்கும். அதிக செலவுகள் கூட ஆகாமல் ஒரு ஏழை மகன் டாக்டராக முடியும் ஒரு ஏழை மகள் டாக்டராக முடியும் இந்த படிப்பு படிப்பதால் நாம் மக்களுக்கு சேவையும் செய்யலாம் நல்ல விதத்தில் சம்பளமும் பெற்று சீரும் சிறப்போடு வாழலாம்

2. டாக்டருக்கு அடுத்தபடியாக ஆர்கி ஸ்ட்ரக்சர்( Architecture ) உங்க எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும் கட்டட அமைப்பாளர். பொதுவா வீடு கட்டறது அப்படின்னு நமக்கு தோண்டக்கூடிய விஷயம் என்னனு பார்த்தீங்கன்னா இன்ஜினியர் ஒரு சிவில் இன்ஜினியர் கிட்ட போயிட்டு எனக்கு ஒரு பிளான் போட்டு கொடுங்க நான் வீடு கட்டுறேன் அப்படின்னு சொல்லி கேட்டு நாம நம்முடைய வீடு கட்டுவோம் பொதுவாக அனைவருக்கும் தெரிந்தவர்கள் சிவில் இன்ஜினியர்கள் தான் ஆனா சிவில் இன்ஜினியர்களுக்கு. மேல ஒருவர் இருக்கிறார் அவர்கள் தான்  ( Architecture ) அவர்கள் தான் மிக முக்கியமானவர்கள் இன்று தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்டிடங்களை கட்டிய வடிவமைத்தவர்கள் ஆர்கிடெக்ட் டிசைனர் சோ அந்த படிப்பு மிக மிக உன்னதமானது நல்லவிதமான சம்பளத்தையும் ஈட்ட முடியும் ஆனால் ஒன்று ட்ராயிங் ஓவியம் வரையக்கூடிய பழக்கம் இருக்க வேண்டும் என ஃபுல் அண்ட் ஃபுல் டிசைனிங் தான் அதனால நல்ல வரையக்கூடிய பிள்ளையாக இருந்தால் ஆர்கிடெக் சேர்க்கலாம்.

3. மூன்றாவதாக நாம் பார்க்கக் கூடிய படிப்பு ஆடிட்டர் Auditor படிக்கும் போது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும் ஆனால் படித்து முடித்தால் உங்கள் வாழ்க்கை செட்டில் நல்லவிதமான சம்பளம் ஓரிடத்தில் உட்கார்ந்து வேலை உழைப்பு இல்லாமல் ஓரளவுக்கு மூளையை மட்டும் பயன்படுத்தி உழைப்பு போட்டு சம்பாதிக்க கூடிய ஒரு விஷயம். தனியாக ஆபீஸ் வைக்கலாம் இல்லையென்றால் பேங்கில் வேலை செய்யலாம் இல்லை என்றால் கார்ப்பரேட் கம்பெனிகளில் ஆடிட்டராக Auditor பணிபுரிந்து நல்லவிதமான சம்பளத்தை பெறலாம் .

எனக்கு தெரியுது இந்த மூன்று படிப்புகளை படிக்கும் போது நல்ல விதத்தில் ஒருவர் சம்பாதிக்கின்றார்கள். முடிந்தவரை நாம் இந்த மூன்றையும் படிப்பதற்காக முயற்சிகள் செய்யலாம் இல்லாத பட்சத்தில் நான் அதை அடுத்து பெருமளவு சம்பளம் இல்லை என்றாலும் போதுமான அளவு சம்பளத்தை பெறக்கூடிய படிப்புகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொண்டு அதை நாம் படிக்க ஆரம்பிக்கலாம் முடிந்தவரை தங்கள் பிள்ளைகளை இந்த மூன்று படிப்புகள் தயார் செய்தால் நிச்சயமாக நல்ல சம்பளத்தில் உங்கள் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படும்.
Tags