ராசிப் பொருத்தம் / Rasi Porutham

ராசிப் பொருத்தம்

பெண்களின் ஜென்மராசி முதல் ஆணின் ஜென்மராசி வரை எண்ணவும் இப்படி எண்ணி வந்தவை 7-முதல் 12வது ராசிவரை இருக்குமானால் பொருத்தம் உண்டு. பெண் ராசி முதல் புருஷ ராசி வரைக்கும் எண்ணுவதில் 3-4ம் ராசிகளாக ஆண் ராசி வருமானாலும் பொருத்தம் உண்டு. பெண் ராசிக்கு ஆண் ராசி 5-ஆனாலும் பரவாயில்லை. இரு ஜென்மராசி அதிபர்களும் பரஸ்பரம் மித்திரர்களாயின் இரு ராசிகளுக்கும் ஒரே கிரகம் அதிபதியானாலும் ஷஷ்டாஷ்டக தோஷமும் திரீ ராசிக்கு 9-ஆக வரும். புருஷ ராசி தோஷமும் கவனிக்கப்படத் தேவையில்லை.


பெண் ராசிக்கு ஆண்ராசி இரண்டாவதாக ஆனால் துக்கம் பெண் ராசிக்கு ஆண் ராசி ஆறாவதானால் கலகம். இப்படி இருப்பவைகளிலும் பெண்ராசி சமராசியென்றும், பெண் ராசியாக அமையும் போதும் தோஷமில்லை. ஏன் பெண் ஜென்மராசி பெண்ராசியிலும்; ஆண் ஜென்மராசி ஆண்ராசியிலும் அமைந்தபடியால் உத்தமமாகும். அப்படியே பெண் ஜென்மராசி ஆண் ராசியில் அமைந்து, ஆண் ஜென்ம ராசி 6 (அ) 8-ல் அமைந்தாலும் தோஷமில்லை. ஏன்? ஆண்-பெண் ராசி மாறி விடுவதால் ஒத்துப் போகும் என்பதால் இந்த விலக்குகளை அசாதாரணமான சந்தர்ப்பங்களில் அதாவது மற்ற எல்லாப் பொருத்தங்களும் அமைந்து நன்றாக இருந்த ஜாதகம் சிரேஷ்டமாக இந்த விலக்குகளை உபயோகித்து பொருத்தம் கூறுக. இத்தகைய பொருத்தங்கள் சம்சப்தங்களில் என்று கூறப்படும் பரஸ்பர 7-ம் ராசி பொருத்தங்கள் மிகவும் விசேஷம்.

இது இருக்குமானால் கணம், ரஜ்ஜு, வேதை, தினம் போன்ற
இதரபொருத்தங்களை கவனிக்காமலும் அல்லது அவைகள் சற்று ஏறத்தாழ்வாக இருக்குமானால், பாராட்டாமலும் விவாகம் செய்யலாம்.
இந்த சமசப்தத்திலும். கும்ப-சிம்மமும்.
மகர-கடகமும், சமசப்தங்களானாலும் தோஷம் பொருத்தமில்லை என்று கூறலாம்.