ரஜ்ஜுப் பொருத்தம் / Rajiya porutham

ரஜ்ஜுப் பொருத்தம்

சிவலிங்கத்தைப் போன்றோ அல்லது கோவில் கோபுரத்தைப் போன்றோ அல்லது கைவிரல் போன்றோ மூன்று உருவங்களைப் பக்கத்துக்குப் பக்கத்தில் வைத்துக் கொள்ளவும். அந்த உருவங்களை நன்கு நேர்க்கோட்டினால் குறுக்காக பாதித்து விடவும். இப்படி பாதித்தபிறகு அடியிலிருந்து உச்சிவரை எண்ணினால் ஐந்து சங்கியை வரும் உச்சியிலிருந்து மற்றொரு அடிவாரத்திற்கு எண்னால் ஐந்தில் வரும் ஆக ஒரு அடிவாரத்திலிருந்து உச்சி போய் கீழிறங்கி விட ஒன்பது சங்கியைவரும் : இப்படி மூன்று உருவங்களையும் பாதித்தால் 27 சங்கியை வரும் : இந்த 27 சங்கியையும் அசுவிணி முதல் வரிசையாக எண்ணவும்.
அசுவிணி பெண் நட்சத்திரமென்று வைத்துக் கொள்ளவும். இப்பெண்ணுக்கு அசுவிணி, ஆயில்யம், மகம், கேட்டை,மூலம்,ரேவதி நட்சத்திரங்கள் உள்ள ஆண்கள் வரின் பொருத்தமில்லை: இப்படியே பரணி, பெண்ணுக்கு புஷ்யம். பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதியும். கிருத்திகை.
பெண்ணுக்கு புனர்வசு, உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆண்களும், ரோகிணி பெண்ணுக்கு திருவாதிரை. அஸ்தம், சுவாதி, திருவோணம். மிருகசீரிடம் பெண்ணுக்கு சித்திரை, அவிட்டம், ஆண்களும் பொருத்தமில்லை. மற்ற பொருத்தமுண்டு. இப்படி நட்சத்திரங்களும் ஒன்று சதயம் ஆண்களும், நட்சத்திரங்கள் அமையின் ஒரேகோட்டில் அமையும் ஏறுமுகமாகவும், மற்றது இறங்குமுகமாகவும் பொருத்தம் உண்டு என்று ஒரு பட்சமுண்டு. அதாவது பரணி பெண்ணுக்கு புஷ்யம், அனுஷம், உத்திரட்டாதி ஆண்கள்வரின் பொருத்தமுண்டு. இவற்றில் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்கள் பூரணமாக தோஷகரமானது. இவற்றைத் தள்ளவேண்டியது. இந்த ரஜ்ஜுப் பொருத்தம் மிகவும் முக்கியம். ஏனெனில் திருமாங்கல்யபலம் இதன் மூலம் கவனிக்கப்படுவதால் இந்தப் பொருத்தம் அமையவில்லையானால் கல்யாணம் செய்யக்கூடாது.