பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு குணமாக நாம் என்ன செய்ய வேண்டும்.? ரத்தப்போக்கு குணமாக எளிய வீட்டு மருத்துவ முறை.!

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு குணமாக நாம் என்ன செய்ய வேண்டும்.? ரத்தப்போக்கு குணமாக எளிய வீட்டு மருத்துவ முறை.!

பெண்களுக்கு மாதவிலக்கின் போது சிலருக்கு நாள் கணக்கில் ரத்தப்போக்கு இருக்கும் அப்படி இருக்கக்கூடியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம் முதலில் இந்த ரத்தப்போக்கு பெண்களுக்கு ஏற்படுவதற்கு காரணம் உடல் வலிமையின்மை அதாவது வீக்னஸ் என்று சொல்வார்கள் இதன் காரணமாக அவர்களுக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். நல்ல கீரை வகைகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் நல்ல பழங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் நார்சத்துக்கள் இருக்கக்கூடிய பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் பேரிச்சம் பழம் மற்றும் பாதாம் இது போன்ற உணவுகளில் அல்லது காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஒரு நல்ல பலன் அவர்களுக்கு கிடைக்கும். வாருங்கள் ரத்தப்போக்கு குணமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எளிய வீட்டு மருத்துவ முறையில் தெரிந்து கொள்ளலாம்.



மூலப்பொருள்

மாதவிலக்கின் போது சிலருக்கு நாள் கணக்கில் ரத்தப்போக்கு இருக்கும் அப்படிப்பட்டவர்கள் ஏலக்காயை பொடி செய்து வாழைப்பழத்தோடு சேர்த்து காலை மாலை என ஒன்று இரண்டு நாட்களில் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு இரத்தப்போக்கு மாதவிடாய் காலத்தில் இருக்கக்கூடிய பிரச்சனை சரியாகிவிடும்.

விளக்கம்

இதை செய்தும் மாத கணக்கில் மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு நிற்கவில்லை என்றால் கண்டிப்பாக ஒரு மருத்துவரை அணுகி அதற்கான ட்ரீட்மெண்ட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இயற்கையான முறையில் நாம் மருந்துகளை சாப்பிடும் போது அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறையும் நாட்களாகும். ஒருவேளை என்னால் அதற்குள் அந்த வலிகளை தாங்க முடியவில்லை மிகவும் சோர்வாக உணர்கின்றேன் என்று சொன்னால் கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை அணுகி பரிசோதனை எடுத்துக் கொள்ளுங்கள்.