விருச்சிகம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
வாசகர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்திலும், 6ம் இடத்திலும் அமர்ந்திருந்து, சில விசேஷ உயர்வுகளை நீங்களே எதிர்பாராத தருணத்தில் கொடுத்து வந்த ராகு, கேது கிரகங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்தில் மீன ராசியிலும், லாபஸ்தானமான 7ம் இடத்திலும் அமரப்போகிறார்கள். ஆக நீங்கள் பரிகார ராசி வளையத்திலிருந்து தப்பித்து விடுகிறீர்கள். இதனால் இதுவரை அனுபவித்த சந்தோஷம் மகிழ்ச்சிகளை விட மிகப்பெரிய கூடுதல் நிம்மதி மகிழ்ச்சி இனிமை காலம் இந்த ராகுகேது பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கென உதயமாகிவிட்டது.
ராஜயோகம் ஆரம்பம்
இனிமேல்தான் அருமையான உயர்வு காலம் உங்களது ஒவ்வொரு விஷயத்திலும் பெரிய மனதிருப்தியுடன் ஏற்படும். பலவிதமான உயர்வு முன்னேற்ற மகிழ்ச்சிகளை கொடுக்கப் போகின்ற பெயர்ச்சியாக இந்த ராகு-கேது பெயர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. வருகின்ற 2023 டிசம்பர் மாத 20ம் தேதி வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் உங்களது ராசிக்கு சனிபகவான் அர்த்தாஷ்டம சனியாக சுகஸ்தானத்தில் வந்து அமரப்போகிறார். 7 மாதங்கள் கடந்த பிறகு குருபகவான் கம் இடத்தை விட்டு 7ம் இடத்திற்கு நாரப்போகிறார். எனவே அடுத்தடுத்த காலகட்டம் உங்களை முன்னேற்றப்பாதையில் மட்டுமே நகர்த்திச் செல்லப்போகிறது. எனவே வரப்போகின்ற ராகு-கேது பெயர்ச்சியால் உங்கள் ராசிக்கு மிகப்பெரிய ராஜயோகம் ஆரம்பமாகியிருக்கிறது என்று சொல்லிவிடலாம்.
இதுவரை 6ம் இடமான எதிரி எதிர்ப்பு, கடன் வழக்கு, காரிய வெற்றி, மற்றும் சிறிய முயற்சி ஸ்தானத்தில் ராகு கிரகம் அமர்ந்திருந்தது. இதனால் உங்களது அத்தனை காரியங்களிலும் சில நேரங்களில் தேவையற்ற பிரச்னைகளும் தொல்லைகளும் தொந்தரவுகளும் முளைத்து கொண்டிருந்தன. இதனால் நீங்கள் சந்திக்காத நஷ்டமில்லை, கஷ்டமில்லை என்றபடி காலம் நகர்ந்தது. இதையெல்லாம் முறியடிக்கும் விதமாக நல்லது மட்டுமே இனிமேல் நீங்கள் நினைப்பதை தாண்டி மிகப்பெரியளவில் நடந்தேற இருக்கிறது. திடீர் பணவரவு ஆதாயங்களுக்கு குறைவு ஏற்படாது. குடும்ப சுபிட்சம் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்னைகளிலிருந்து வெளிவந்துவிடலாம். திட்டமிட்டதை தவிர்த்து வேறுவிதத்தில் உங்களுக்கான உயர்வான அதிர்ஷ்ட மேன்மை பலன்களை மட்டுமே வாரி வழங்குவதில் இவர்கள் செயல்படுவார்கள்.
மன சஞ்சலங்களுக்கு தீர்வு
இந்த ராகு, கேது பெயர்ச்சியானது தொட்டு. உங்கள் ராசிநாதனாலும், சுக்கிரன், மற்றும் சூரிய கிரகத்தாலும் ஏகப்பட்ட விசேஷ அனுகூலங்கள் ஏற்படும். திடீர் பணவரவு, எதிர்பாராத அதிர்ஷ்டம் பயணங்களால் ஆதாயம், அயலூர், அயல்மாநில அயல் தேச விஷய நடவடிக்கைகளில் புதிய திருப்புமுனை போன்றவைகளும் காத்திருக்கின்றது. இதுவரை மண வாழ்க்கையிலும், குடும்பத்தார் வகையிலும், வாரிசுகள் சார்பிலும் அடைந்த அத்தனை கஷ்டங்களுக்கும், மன சஞ்சலங்களுக்கும் தீர்வு கிடைக்கும்.