கன்னி ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 (உத்திரம் 2,3,4ம் பாதம், அஸ்தம். சித்திரை 1.2ம் பாதம்) Kanni Rasi Rahu ketu peyarchi palangal 2023 to 2025

கன்னி ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025

(உத்திரம் 2,3,4ம் பாதம், அஸ்தம். சித்திரை 1.2ம் பாதம்)

அவ்வளவே. இனிமேல் இதையெல்லாம் மீறி, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து பெரிய பெரிய சிக்கல், பிரச்னை கெடுபிடிகளிலிருந்து கொஞ்சம் மீளவைக்கும் ராகு, கேது கிரகங்கள்.
சங்கடங்களில் இருந்து வெளிவரலாம்

ஆகவே வாசகர்களே, இனி நீங்கள் எல்லா கஷ்டத்தையும் தாண்டி இப்போது அனுபவித்துவரும் இமாலய சங்கடங்களில் இருந்து வெளிவந்து விடுவீர்கள். இந்த ராகு, கேது பெயர்ச்சி தருணத்தில் உங்கள் ராசிக்கான மற்ற கிரக நிலைகளின் சுழற்சிகள் நல்லவிதமாகவே அமைந்திருக்கிறது. அத்துடன் வருகின்ற 2023 டிசம்பர் மாத 20ம் தேதி சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கம் பிரகாரம் 5ம் இடத்தை விட்டு 6ம் இடத்திற்கு நகரப் போகிறார். அடுத்ததாக ராகு- கேது பெயர்ச்சியானதிலிருந்து எட்டு மாதம் கடந்த ராசிக்கு 9ம் இடத்தில் குருபகவான் வந்து அமரப்போகிறார். ஆக அடுத்தடுத்த கிரக நகர்ச்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது.

அதோடு இந்த ராகு-கேது பெயர்ச்சியானதிலிருந்து 22 தினங்கள் முடிந்தபிறகு எதிர்பாராத பெரியதொரு வளர்ச்சி செவ்வாய் கிரகத்தின் மூலமும், சூரிய கிரகத்தின் மூலமும் ஏற்படப்போகிறது. இதனால் கூடுதல் வளர்ச்சி சுபிட்சங்களை பெரும்பாலான வகையில் சந்திக்கவே இருக்கிறீர்கள். அதனால் இனிவரும் காலங்கள் உங்களுக்கு யோகமான, மனநிம்மதியான அதிர்ஷ்டத்திருப்பங்களை கொடுக்கத்தான் போகிறார்கள். ஆக மதிப்பு மரியாதையை, வெளிவட்டார உயர்வுகளை அதிகப்படுத்துகிற அற்புதமான அதிர்ஷ்ட நேரம்தான் துவங்க இருக்கிறது. ஏகப்பட்ட இனிமை சம்பவங்கள் உங்களது வாழ்வில் நடக்கத்தொடங்க இருக்கின்றன. எதிர்பாராத நன்மைகளும் பெரியதொகை வரவுகளும் கிடைத்து உங்களை ஆச்சரியப்படுத்தப் போகிறது.