துலாம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025
(சித்திரை 3,4ம் பாதம், ஸ்வாதி, விசாகம்1,2,3ம் பாதம்)
வாசகர்களே, உங்களுக்கு கடந்த ஒன்றரை வருட காலமாக ராசிக்குள் அமர்ந்திருந்த கேதுவும், 7ம் இடத்தில் அமர்ந்திருந்த ராகுவும் எந்தநேரத்தில் எந்தமாதிரியான பிரச்னைகளை தருவார்களோ? என்ற மாதிரியான. பயத்திலேயும் குழப்பத்திலேயும் நகர்ந்தது. இருந்தாலும், உங்கள் ராசிக்கு கெட்டவரான குருபகவான் அவருக்கே உரித்தான சுப ஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்து ராசியையும், 7ம் இடத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தையும் இதுவரை பார்த்ததால்| உங்களுக்கு மிகப்பெரிய கடுமைகள் எதுவும் நடந்துவிடாமல் தடுத்தது.
வசந்தகாலம் ஆரம்பம்
இதுவல்லாமல் ராசிக்கு 4ம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்கிற சனிபகவான் அவர் பங்குக்கு கொஞ்சம் ஆட்டிப்படைத்துதான் பார்த்தார். இதற்கெல்லாம் மிகச்சரியான விடிவுகாலம் ஏற்படவே உங்களுக்கான பெயர்ச்சியாக இந்த ராகு-கேது பெயர்ச்சி வந்திருக்கிறது. பரிகார ராசி வளையத்திலிருந்து வெளிவந்து விட்டீர்கள். சொல்லப்போனால் உங்களுக்கான வசந்தகாலம் இனிமேல்தான் ஆரம்பம். ராசிக்கு 7ம் இடத்தில் அமர்ந்திருக்கிற ராகு விலகி 6ம் இடத்திலும் ஜென்ம ராசியில் நிற்கின்ற கேது கிரகம் விலகி 12ம் வீட்டுக்கும் பெயர்ச்சியாகிறார்கள். ஆக, உங்களது அனைத்து குழப்பங்களும், சங்கடங்களும், அனாவசிய நெருக்கடிகளும், குடும்பரீதியான தொந்தரவுகளும், வாழ்க்கைத் துணையுடனான சம்பந்தமில்லாத ஒற்றுமைக்குறைவு. பனிப்போர் போராட்டங்களும் இனிமேல்தான் தீரப் போகிறது
ஒவ்வொரு விஷயத்திலும் சுபமான இனிமைகள் தொடரப்போகின்றன. அதேநேரம் இவர்கள் எந்த நல்ல இடத்திற்கு வந்தாலுமே சில நேரங்களில் அனாவசிய இடர்பாடுகளை ஏற்படுத்திவிடுகிறார்கள் என்ற உங்களது அனுபவத்தினாலும் என்னென்ன சங்கடங்களை இனிமேல் நாம் நாம் அனுபவிக்கப் போகிறோமோ? என்றபடியெல்லாம் மனதுக்குள் தேவையற்ற கிலேசத்தை, குழப்பத்தையும் அடைந்து கொண்டிருக்கிறீர்கள். அப்படியெல்லாம் ஒன்றும் ஆகி விடாது, கவலைப்படாதீர்கள். 12ல் கேது கிரகம் நிற்கப்போவது ஒன்றும் ஒன்றும் பெரிதாக, புதிதாக பாதிப்புகளை தந்து விடாது என்று நம்புங்கள். காரணம் பொதுவாக இந்த கிரகங்கள் இயற்கை சுபர்களான புதன், குரு, சுக்கிரன், சந்திரன் வீடுகளில் அமர்கின்ற போது எண்ணற்ற உயர்வு, அதிரடி அதிர்ஷ்ட பலன்களை கண்டிப்பாக கொடுப்பதற்கு கடமைப்பட்டவர்கள். அப்படிப் பார்க்கையில் 6ம் இடத்தில் ராகு கிரகம் குருபகவானின் வீட்டில் நிற்கப்போவது எதிரி எதிர்ப்பு கடன் மற்ற பிற பிரச்னைகள் அனைத்தையும் தவிடுபொடி ஆக்குகிற அமைப்புதான். மேலும் புதன் கிரகத்தின் வீட்டில் கேது கிரகம் அமரப்போவது எந்த விஷயத்தில் இறங்கினாலும் உபயோககரமாக, லாபத்துடன்தான் நடந்து முடியும்.