சிம்மம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025
( மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் )
உங்களது ராசிக்கு இப்போது பெயர்ச்சியாகப்போகின்ற ராகு, கேது கிரகங்கள் மூல மனதளவில் அச்சமும், வீணான கிலேசமும் ஏற்பட்ட வருகிறது. ஏனெனில் இவர்கள் கஷ்டம் தருகின்ற இடத்திற்கு வருகிறார்கள் என அனைவரும் பயமுறுத் கொண்டிருப்பதால்தான். பயப்படாதீர்கள். இவர்கள் சாதகமற்ற இடத்திற்கு வந்து அமர்ந்தாலும், அடுத்து வருகிற 8 மாதங்கள் வரை ராசிக்கு 9ம் இடத்தில் அமர்ந்திருக்கப்போகிற உங்கள் ராசிக்கு யோகாதிபதியான குருபகவான் மூலம் எவ்வித புதிய இடர்பாடுகளும் தொந்தரவுகளும் சூழ்ந்து கொள்ளாது. இதுவரை குடும்ப ரீதியாக மகிழ்ச்சியாகவும். உத்தியோகம், பணி பதவி விஷயங்களில் சாதகமாகவும், தொழில் வியாபார நிர்வாக விஷயங்களில் லாபகரமாகவும் மிக இனிமையான நன்மைகளை பணம் காசு தாராள வரவுகளை தடையில்லாமல் அனுபவித்து விருப்பப்படுகிற,
திட்டமிட்ட விஷயங்களை ஓரளவு சாதகத்தோடு நன்மைகளை அதிர்ஷ்டகரமாகவே அடைந்தீர்கள்.
நெருக்கடிகளை சமாளிக்கலாம்.
இப்போது ராசிக்கு 2 மற்றும் 8ம் இடத்தினில் வந்து அமரப்போகிற ராகு, கேது கிரகங்கள் மூலம் கொஞ்சம் நெருக்கடிகள் ஏற்படும்தான் என்றாலும், எல்லாவற்றையும் சர்வ சாதாரணமாக சமாளிக்கலாம் என்ற அமைப்பும் உங்களது ராசிக்கு இருக்கிறது. வருகின்ற 2024 ஏப்ரல் மாத இறுதி வரை குருபகவான் அவருக்கே உரித்தான இடத்தில் அமர்ந்திருப்பதால், இந்த ராகு, கேது பெயர்ச்சியாவதன் மூலம் எவ்வித பெரிய இடர்பாடுகளையும் நீங்கள் சந்திக்கப்போவதில்லை. தொடங்குகிற விஷயங்கள் அத்தனையுமே புதிய குதுகலத்துடன் லாபத்தை தந்து கொண்டு நிறைவேறும்.
சுபகிரகங்களின் வீடுகளான புதன் மற்றும் குருபகவானின் வீட்டில் அமரப்போகிற இவர்களால் ஓரளவு அனுகூலத்தை உண்டாக்கித்தர முடியும் என இவர்களே சொல்கிறார்கள். மேலும் உங்களது ராசிக்கு இதுவரை 3ம் இடத்திலும், 9ம் இடத்திலும் சாயாகிரகங்களான இவர்கள் இருவரும் நின்று சாத்தியமில்லாத விஷயங்களில் எல்லாம் எண்ணற்ற உயர்வு மாற்றங்களையும், செழிப்புகளையும், காரிய வெற்றிகளையும், திடீர் நன்மைகளையும், பொருளாதார உயர்வுகளையும் ஏற்படுத்தி குடும்பத்திற்கான உயர்வுகளையும், வீடு கட்டட, ஆடம்பர வசதி மேன்மைகளையும் ஏற்படுத்தினார்கள். துயரங்களையும், கெடுபிடிகளையும் விரட்டினார்கள். வாக்கு நாணயத்தை காப்பாற்ற வைத்திருப்பார்கள். உள்ளூர் கரவ புகழ் அந்தஸ்து மரியாதையை குறைக்காமல் நடைபோட வைத்திருப்பார்கள்.
உயர்வுகள் ஏற்படும்
இப்போது குடும்ப ஸ்தானத்திலும், ஆயுள் ஆரோக்கிய திடீர் அதிர்ஷ்ட ஸ்தானத்திலும் வந்து நிற்கப்போகிற இவர்கள் சிலநேரம் திட்டமிடுகிற. முடிவெடுத்து இறங்குகின்ற விஷயங்களில் சின்ன சின்ள தடைகளையும், கோளாறுகளையும் உண்டாக்கிப் பார்க்க வாய்ப்பு உண்டு. இருந்தாலும் வருகின்ற 2023 டிசம்பர் மாத 19ம் தேதி முடிவதற்குள் 6ம் இடத்தில் அமர்ந்திருக்கிற சனிபகவான் மூலம் உங்களது செயல்பாடுகளில் தனிப்பட்ட சுறுசுறுப்பு, தைரியம், துணிச்சல் வேகம் ஏற்பட்டு ஒவ்வொரு விஷயத்தையும் உடனடியாக பல சாதனைகளுடன் முடித்துக் கொள்ள காத்துக் கொண்டிருக்கின்றீர்கள்