கும்பம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025
(அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதம்
இதுவரை உங்களது ராசிக்கு மிக அற்புதமான இவர்களுக்கே உரித்தான 3 மற்றும் 9ம் இடத்தில் அமர்ந்து அபரிமித விசேஷ அனுகூல மாற்றங்களை உங்களது வாழ்வில் ஏற்படுத்தி இருப்பார்கள். அல்லது அடுத்தடுத்த உயர்வுகளுக்கான வழிவகைகளை சிறப்பான பாதையை அமைத்துக் கொடுத்திருப்பார்கள். ஒரு சிலருக்கு மட்டும் தங்களது சுயஜாதக தசா புத்தியின் அடிப்படையில் ஏதேனும் அனாவசிய சங்கடப்பலன்கள், தேவையற்ற இடையூறுகள், இழப்புகள், குடும்பத்திற்குள் அனாவசியமான சஞ்சலங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
இந்த நிலையில் குருபகவான் உங்களுக்கு இப்போது சரியில்லாத காரணத்தினாலும், ஏழரைச்சனி காலத்தில் விரய சனிக்காலம் நடந்து கொண்டிருப்பதாலும், பலவகையிலும் இழப்புகளையும், பொருளாதார விரயங்களையும் நஷ்டங்களையும், தொழில் வியாபார ஸ்தம்பிப்புகளையும், பொருள் இழப்புகளையும், குடும்ப ரீதியான மன அமைதி குறைவையும், குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய கட்டாயத்தையும் சந்தித்தீர்கள். இருந்தாலும் ராகு. கேதுக்கள் இப்போது வந்து அமரப்போகிற இடத்தின் மூலம் நீங்கள் பரிகார ராசி வளையத்திற்குள் அகப்படுகிறீர்கள். இப்படியான சூழலில் 3 மற்றும் இடத்திலிருந்து ராகு-கேது கிரகங்கள் பெயர்ச்சியாகி குடும்ப ராகுவாக, அஷ்டம கேதுவாக அமரப் போகிறார்கள்.
கடுமைகள் இருக்காது
ராசிக்கு 2ம் இடத்தில் குருவின் வீட்டில் ராகு கிரகமும், புதன் கிரகத்தின் வீட்டில் கேது கிரகமும் வந்து அமர்வது கொஞ்சம் சிரமமான அமைப்புதான். ஆனாலும் இதற்கு முன்பு அனுபவித்த கடுமைகள் போல் இருக்காது என்றும் சொல்லிவிடலாம். உங்கள் ராசிக்கு மறைமுக ராஜயோக பலன்களையும் உண்டாக்கத்தான் போகிறார்கள். அதேநேரம் ராசிநாதன் சனிபகவான் 12ம் வீட்டில் ஆட்சிபெற்ற நிலையில் இருப்பதால், அவரே விரய சனியாக சஞ்சாரம் செய்வதால் உங்களது பத்து பிரச்னைகளில் ஆறு பிரச்னைகள் நினைத்த மாதிரி முடிவுக்கு வந்து சாதகத்தை உண்டாக்கி தரும். மேலும் சுபகிரகத்தின் வீடுகளான குரு மற்றும் புதனின் வீடுகளில், ராகு, கேதுக்கள் அமரப்போவதால் இந்த இரண்டு கிரகமும் அதாவது குருபகவானும் புதனும் உங்களுக்கு நல்லது செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் பெரிய குளறுபடி, பிரச்னை சிக்கல் என்றபடி எது சார்பாகவும் அனுபவிக்கப் போவதில்லை. அப்படியே ஏதேனும் உங்களை நெருக்கடி கொடுத்தால் அதனை சமாளிக்கக்கூடிய வல்லமையை இந்த ராகு-கேது கிரகங்கள் மூலமே அடைந்து விடலாம்.
மேன்மைகள் கிடைக்கும்
அத்துடன் வருகின்ற 2023 டிசம்பர் மாத 20ம் தேதி வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் சனிபகவான் பெயர்ச்சியாகி ஜென்ம ராசியில் வந்து அமர இருக்கிறார். அதோடு இந்த தருணத்தில் உங்களது ராசி சற்றே தடுமாற்றமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் ராகு கேது பெயர்ச்சியாகிஅடுத்து வருகின்ற ஒன்றரை ஆண்டுகளுக்கு உங்களுக்கான சுப சுபிட்ச உயர்வு பலன்களை கொடுக்கப் போகிறார்கள்