மகரம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 (உத்திராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம் ) Magaram Rasi Rahu ketu peyarchi palangal 2023 to 2025

மகரம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025

(உத்திராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

நீங்கள் இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் பரிகார ராசி வளையத்திலிருந்து வெளிவருகிறீர்கள் என்பது மகிழ்ச்சி செய்தி. கடந்த ஐந்தரை ஆண்டுகளாக 71/2 சனியின் பிடியில் அகப்பட்டு என்னதான் சனிபகவான் சொந்த வீட்டுக்காரராக இருந்தாலும் உங்களைத்தான் அதிகப்படியாக வாட்ட வேண்டும் என முடிவு செய்து வாட்டிய மாதிரி அனைத்திலும் தொந்தரவு, ஆரோக்கியப் பிரச்னை, வீண் கோளாறு, குடும்ப பிரிவு, வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு, வாரிசுகளுடன் பனிப்போர் போன்றவற்றையெல்லாம் சந்தித்துக்கொண்டே,
இடையிடையே சாதித்துக் கொண்டும் வாழ்க்கையை நகர்த்தி வருகிறீர்கள். இந்த சிரமத்திற்கெல்லாம், தொல்லைகளுக்கெல்லாம் விடிவுகாலம் ஏற்படுத்தவே ராகுகேது கிரகங்கள் அவர்களுக்கே உரித்தான யோகமான ஸ்தானத்தில் 3 மற்றும் 9ம் இடத்தில் வந்து அமர்கிறார்கள்.

விடிவு காலம் ஏற்படும்

உங்களது ராசிக்கு இப்போது நடக்கின்ற ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சி மூலம் ஏதாவது சில சங்கடங்களும்
உயர்வுகளை, புதிய கூட்டணி தொழில் பட்ஜெட், நிர்வாக விஷயங்களில் ஈடுபடுகின்ற முயற்சிகளில் மாபெரும் சாதகத்தை உண்டாக்கப்போகிறார். லாபகரமான பயணம் தொடர்ச்சியாக காத்திருக்கிறது. உங்களது விஷயங்கள் எல்லாம் எந்தவொரு நிறைவேற்றத்தையும் தராமல் இதுவரை இழுபறி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறதோ அதுவெல்லாம் வருகின்ற 2024 மார்ச் மாத 19ம் தேதி முடிவதற்குள் முழுவதும் உடனுக்குடன் நிறைவேறி லாபங்களை கொடுத்துவிடும்.

சந்தோஷ மாற்றம் ஏற்படும்

கடந்த 2020ம் ஆண்டிலிருந்து உங்களை சுற்றிவளைத்து இருக்கிற அத்தனை இடர்பாடுகளும் பறந்தோடிவிட இருக்கிறது. இதற்கான காரணம் பாத சனியாக 2ம் இடத்தில் சஞ்சரித்த சனிபகவானாலும், அதனைத்தொடர்ந்து பெயர்ச்சியான குருபகவானாலும் ஏகப்பட்ட தொந்தரவுகளை தொட்டுப்பார்த்தீர்கள். இதுபோல் சூழல் இனிமேல் எந்த ரூபத்திலும் ஏற்படாது. அத்துடன் வருகிற கார்த்திகை மாத 16ம் தேதிக்குப்பிறகு உங்களது வாழ்வில் எண்ணற்ற மாற்றங்கள் சந்தோஷங்கள், திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்பட இருக்கிறது. எனவே மேலும் கூடுதல் உயர்வு பலன்கள், திடீர் அதிர்ஷ்டங்கள், இல்லத்துக்குள் சுபகாரிய விசேஷ களேபரங்கள் என உங்களை மகிழ்ச்சியின் எல்லைகளுக்கு கொண்டுபோய் நிறுத்தப்போகிறது. புதியபுதிய விஐபி தொடர்புகளும் கிடைக்கப்போகிறது. பெரிய பட்ஜெட் விஷயங்களில் இறங்கப்போகிறீர்கள். இதற்கான ஆதாய அனுகூல திருப்திகளை பிசிறில்லாமல் ராகு, கேது கிரகங்கள் கொடுக்கப்போகின்றன. மேலும் சனிபகவான் ஏழரையை முடித்து வெற்றி ஸ்தானத்துக்கு நகர்ச்சியாகி கொடுக்கப்போகிற பலன்களை இப்போதே இந்த காலக்கட்டத்தில் ஆரம்பித்துவிடுவார். எனவே எதற்காகவும் நீங்கள் கவலைப்படாமல் ஒவ்வொரு விஷயத்திலும்