ரிஷபம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 (கார்த்திகை 2,3,4ம் பாதம்,ரோகிணி, மிருகசீரிஷம் 1.2,ம் பாதம்) Rishabam Rasi Rahu ketu peyarchi palangal 2023 to 2025

ரிஷபம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025

(கார்த்திகை 2,3,4ம் பாதம்,ரோகிணி, மிருகசீரிஷம் 1.2,ம் பாதம்)


உங்களுக்கு எந்த மாதிரியான நெருக்கடிகள் ஏற்பட்டிருந்தாலும், நமக்கான காலம் வரட்டும். பொறுமை காப்போம் என்றபடியான எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்வதற்கான அதிர்ஷ்ட காலம், யோகமான நேரம் ஏற்பட்டுவிட்டது. உங்களுக்கான சுபிட்ச காலம் தொடங்கியும் விட்டது இந்த ராகு, கேது பெயர்ச்சியால்.
கஷ்டங்களுக்கு தீர்வு ஏற்படும்

இதுவரை உங்கள் ராசிக்கு 12 மற்றும் 6ம் இடத்தில் நின்று ஏற்ற இறக்கமான பலன்களை தந்து வந்த ராகு, கேது கிரகங்கள் பெயர்ச்சியாகி மீன ராசியிலும், கன்னி ராசியிலும், ராசிக்கு 11 மற்றும் 5ம் இடமாக வந்து அமரப்போகிறார்கள். இதன்மூலம் ஏகப்பட்ட வளர்ச்சி, மகிழ்ச்சிகளை சந்திக்கப்போகிற முதல் தர அதிர்ஷ்டசாலியாக மாறிவிட்டீர்கள். பரிகார ராசி வளையத்திற்குள் சிக்காமல் யோகமான விசேஷ அதிர்ஷ்டங்களை அடையப்போகிற ராசிகளில் ஒன்றாக இருக்கிறீர்கள். உங்களது ஒட்டுமொத்த கஷ்டத்திற்குமான தீர்வுகளை ஏற்படுத்த வந்திருக்கிற பெயர்ச்சி இது.

இதுவரை 12ல் அமர்ந்திருந்த ராகு கிரகத்தால் சில நன்மைகள் நடந்திருந்தாலும், இடையிடையே இடர்பாடுகளை. விரயங்களை, தொந்தரவுகளை அனுபவித்திருப்பீர்கள். சாப்பிடக்கூட நேரமின்றி வேலை, பயணம், உத்தியோகம், மற்ற பிரச்னைகளுக்காக ஓடவேண்டிய சூழலுக்கு ஆளாக்கியிருப்பார்கள். இந்த நிலைமை சட்டென மாறப்போகிற பெயர்ச்சி இது.

கேது கிரகம் இதுவரை 6ம் இடத்தில் அமர்ந்திருந்தது. இதனால் சம்பந்தமே இல்லாத எதிரி எதிர்ப்பு வம்பு தும்பு விவகாரங்கள் கன்னாபின்னாவென முளைத்து ஆட்டிப்படைத்திருக்கும். அதேநேரம் எப்படியோ, எந்த ரூபத்திலோ தப்பிக்கவும் வைத்திருக்கும். கேட்ட இடத்தில் எல்லாம் கடன்களை வழங்கியிருக்கும். எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் சமாளித்து விடலாம் என்றபடியான நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும், இந்த நிலைமையெல்லாம் இன்னும் சற்றே கூடுதலாகி இந்த ராகு-கேது கிரகங்கள் வந்து அமரப்போகிற இடங்களால் மேலும் பல நன்மைகளை அடைய வைக்கப்போகின்றன.

தன்னம்பிக்கை அதிகரிக்கும்

11ம் இட நம் இட ராகு கேதுக்களால் எதிர்பாராத தருணத்தில் பெரிய தொகை வரவும், பரிசுப் பண ஆதாய வரவுகளும் உண்டாகும். உபரி வருமானம் அதிகரிக்கும். சேமிப்புகள் கூடும். எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும், சாதாரணமாக சாதித்துவிடலாம். தரகு, கமிஷன் ஆதாய வரவுகளும் காத்திருக்கிறது. அந்நிய மதம் மற்றும் இனத்தவரால் ஒத்துழைப்பு தக்கத் தருணத்தில் கிடைக்கும், ஏற்ற, இறக்கமான பொருளாதார நிலைமை சரியாகப்போகிறது. மனதிற்குள் புதிய துணிச்சலும், தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.

குடும்பத்திற்குள் உறவுகளால், சொந்தங்களால், வாழ்க்கைத்துணையால் ஏற்பட்ட சிக்கல், மனக்கசப்பு, போட்டி போராட்டத்தை எல்லாம் முடிவுக்கு கொண்டுவர இருக்கிறது. லாப ராசியில் அமர்ந்திருக்கிற ராகுபகவான் ஈடுபடுகிற விஷயங்களையெல்லாம் நிறைவேற்றி வைப்பார். வருமான பாதிப்பிலிருந்து வெளி வரவைக்கும். இழந்த நகை மீட்டெடுக்கக்கூடிய அதிர்ஷ்டத்தைத் தரும். புதிய கடன் நட்டு சொத்துகளை மீண்டும் வாங்குவதற்கான சூழல்கள் ஏற்படாது. எதிர்கால உயர்வர் களை உண்டாக்கும்.