மேஷம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) Mesham Rasi Rahu ketu peyarchi palangal 2023 to 2025

மேஷம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

உங்களது ராசிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ராகு, கேதுக்கள் ஜென்ம ராசியிலும், 7ம் இடத்திலும் அமர்ந்து அலைக்கழித்து கலங்கடித்திருக்கும். வம்பு தும்புகளை ஏற்படுத்தி. நிம்மதி இல்லாமல் நடைபோட வைத்திருக்கும். அமைதியாக செயல்பட்டிருந்தாலும் ஏட்டிக்கு போட்டியான விஷயங்கள் வாழ்வில் நடந்திருக்கும்.

ஈடுபடுகிற விஷயங்களில் குளறுபடிகளையும், குடும்ப ரீதியான சச்சரவுகளையும் ஏற்படுத்தியிருக்கும். கடைசி நேரத்தில் வெற்றி கைகளை வீட்டு நழுவியிருக்கும். குடும்பத்தினருக்கு அனாவசியமான செலவுகளை எந்த ரூபத்திலோ ஏற்படுத்தியிருக்கும். இளவயது வாரிசுகளால் மனக்கவலைகளை உண்டாக்கி இருக்கும். இதற்கெல்லாம் மாறுதல்களை ஏற்படுத்துவதற்காகவே இந்த ராரு- கேது பெயர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இப்போது சஞ்சரிக்கின்ற ஜென்ம ராசியை விட்டு விலகி ராகு 12ம் இடத்திலும், கேது கிரகம் 6ம் இடத்திலும் வந்து அமரப்போகிறார்கள்.
கவலைக்கு அவசியமில்லை

ஆகவே, இனி எதற்காகவும் நீங்கள் கவலைப்படவேண்டிய அவசியமே இருக்காது. இதுவரை உங்கள் ராசிக்கு பாதகாதிபதியான சனி பகவான் 10ம் இடத்தில் அமர்ந்து வாட்டி வதைத்துக் கொண்டிருந்தாலும், அவரால் ஏதோ சில நன்மைகளையும் அடைந்து கொண்டுதான் இருப்பீர்கள். சனிபகவான் வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் வருகின்ற 2023 டிசம்பர் மாத 20ம் தேதியிலிருந்து லாபஸ்தானத்தில் அமரப்போகிறார். அதன்பிறகுதான் பல மாற்றங்கள் உங்களது வாழ்வில் சுபிட்சமான இனிமைகளுடன் நடந்தேறும்.

மீன ராசியிலும், கன்னி ராசியிலும் ராகு, கேது அமரப்போவதால் இனி தொந்தரவு என்பதற்கே வேலையில்லை. வருமான விஷயங்களுக்கு பாதிப்பில்லை. இறங்குகின்ற ஒவ்வொரு விஷயத்திலும் திருப்தியான மேன்மைகளை புதியவித அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்கள். இப்போதைய சூழல்களையும், பொருளாதார உயர்வுகளையும், மனதுக்குள் துணிச்சலையும், தைரியத்தையும், அசாத்திய நம்பிக்கையையும் கொடுப்பார்கள்.

பொதுவாக இவர்கள் எந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார்களோ, அந்த வீட்டின் கிரகம் எதுவோ, கொடுப்பார்கள். சாதக, பாதக பலன்களை ஆகவே உங்கள் யோகாதிபதியான குருபகவானின் வீட்டில் ராகு கிரகம் ராசிக்கு அமர்வதே மிகப்பெரிய பாக்கியம். கேதுபகவான் புதனின் வீட்டில் அமர்வது மிகப்பெரிய கொடுப்பினை, யோக அதிர்ஷ்டம். இதன்மூலம் எதிர்பாராத அதிர்ஷ்ட பரிசு பண ஆதாய வரவுகளை ஏற்படுத்தும். எதிரி எதிர்ப்பு வம்பு தும்பு விவகாரங்களிலிருந்து வெளிவர வைக்கும். வழக்குகளில் வெற்றியை. சாதகத்தை உண்டாக்கும். பொருளாதாரக் கஷ்டம் தீரும்.