எந்த காரியத்தை தொடங்கப் போகின்ற போதும் விநாயகரை வணங்கி செயல்பட்டால் எந்த தடங்கலும் இன்றி காரியம் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை அதன் காரணமாக நாடு முழுவதும் விநாயகரை வழிபாட்டிற்கு முன்னுரிமையை முக்கியத்துவத்தை கொடுக்கிறார்கள்.
எதற்காக விநாயகருக்கு முன்னுரிமை கொடுக்கின்றார்கள் என்றால் சகல சாஸ்திரங்களையும் கற்று தேர்ந்தவர் விநாயகர் அதாவது இன்று கடவுளுக்கு படைக்கக்கூடிய அத்தனை பரிகார முறைகளும் வணங்கக்கூடிய வழிபாட்டு முறைகளுக்கும் மூத்த கடவுள் யார் என்று பார்த்தால் விநாயக பெருமான் தான் அதனால் எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களையும் கரைத்து குடித்தவர் விநாயக பெருமான் என்பதால் அவரை முதலில் வழிபட்டு பிறகு அனைவரையும் வணங்க வேண்டும் என்பது ஒரு ஐதீகமாக பார்க்கப்படுகிறது.