சனி திசையில் ராகு புத்தி பலன்கள் / Sani maha Thisai rahu puthi Palangal in tamil

சனி திசையில் ராகு புத்தி பலன்கள் / Sani maha Thisai rahu puthi Palangal in tamil 

சனி தசையில் ராகு புக்தி இரண்டு வருஷங்கள், பத்து மாதங்கள், ஆறு நாட்கள் இருக்கும்.
வீரம் பெருகி கீர்த்தி வளர்ந்து தைரியம் மிகுந்து பலர் போற்றிப் பணியும் நிலைமையைச் சிலர் அடைந்து சந்தோஷ வாழ்க்கையை அனுபவிப்பார்கள். இவர்களுக்கு ஜாதக ரீதியாக இராகு ஜனன லக்னத்திற்கு 3, 6, 11 இடங்களுக்கு அதிபதியாய் மேஷம், ரிஷபம், கடகம், விருச்சிகம் ராசியில் இருந்து தசாநாதனாகிய சனி பகவானுக்கு கேந்திராதிபதியாக இருந்தால் மேற்கண்ட பலன்களுடன் மேலும் பல நன்மைகளைப் பெற்று சுகமாய் இருப்பார்கள்.

ஆனால் புக்தி நாதனாகிய ராகு ஜனன லக்னத்திற்கு அஷ்டம விரய ஸ்தானத்திலிருந்து தசாநாதனாகிய சனிக்கு மறைவாக இருந்தால் வீண் அலைச்சல், கஷ்ட நஷ்டங்கள், பொருள் விரயம், குடும்பத்திலும் அமைதியின்மை, வழக்குகள் மூலம் மனம் எப்போதும் சஞ்சலப்பட்டுக் கொண்டு இருப்பது இவைகளே பலன்களாகும்.