சனி மஹா தசையில் புதன் புக்தி 2 வருஷங்கள் 8 மாதங்கள் 9 நாட்கள் இருக்கும்.
புக்தி நாதனாகிய புதன் ஜனன லக்னத்திற்கு ஆட்சி, உச்சம். நட்பு திரிகோண வாக்கு லாப் ஸ்தானாதிபதியாயிருந்து. தசாநாதனாகிய சனி பகவானுக்கு கேந்திரத்தில் இருந்து குரு, சுக்கிரன் பார்வை பெற்றால் வித்தை ஞானம் பெரியோர் சேர்க்கை. நண்பர் உறவினர் சகாயம், வியாபார லாபம், செல்வப் பெருக்கு. எல்லாம் ஏற்படும். மனோ நிம்மதியைப் பெறுவார்கள்.
ஆனால் புக்தி நாதனாகிய புதன் பகை நீச ஸ்தானத்திலிருந்து தசாநாதனாகிய சனி பகவானுக்கு மறைவு ஸ்தானத்தில் ராகு, கேது பார்வை பெற்றுவிட்டால் மனக்கவலை, தொல்லைகள், அகால போஜனம், போஜனத்திற்கே கவலை, வீண் அலைச்சல் இவைகளே பலன்களாகும்.