சனி திசை : சுய புத்தி பலன்கள் / Sani maha Thisai suya puthi Palangal in tamil

சனி திசை : சுய புத்தி பலன்கள் / Sani maha Thisai suya puthi Palangal in tamil 

சனி மஹா தசை பத்தொன்பது வருடங்கள் இருக்கும். இதில் முதன் முதலாக சுய புக்தியாகிய சனி புக்தி மூன்று வருடங்களும் மூன்று நாட்களும்.
சனி பகவான் ஜனன லக்னத்திற்கு 3, 6, 11 இடத்தில் உச்ச நட்பாயிருந்து புதன், குரு, சுக்கிரன், பார்வை பெற்றால் தைரியம் மிகும். செய்தொழிலில் ஆர்வம். செல்வம் பெருகும். மனோ உற்சாகம் நிறைந்திருக்கும். சுப பலன்கள் தொடர்ந்து வரும்.

சனி பகை நீச்ச ஸ்தானத்திலிருந்து கோண திரிகோணாதிபதியாய் இருந்தால் நஷ்டங்களும், கஷ்டங்களும், நிறைந்திருக்கும் மன அமைதியில்லாமல் அவதிப்படுவார்கள். பொருள் நஷ்டம் ஏற்படும்.