ரிஷபம் ராசி ஜூலை மாத ராசி பலன் / Rishabam rasi July Month Rasi palan

ரிஷபம் ராசி மற்றும் கிருத்திகை மற்றும் ரோகினி மற்றும் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த ஜூலை மாத ராசி பலன்.
ரிஷபம் ராசி அன்பு நண்பர்களே உங்கள் ராசிக்கு நாளில் செவ்வாய் பகவான் இருப்பதாலும் மற்றும் இரண்டில் சூரியன் சஞ்சரிப்பதாலும் அது மட்டுமல்லாமல் 12ல் குரு சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு இந்த மாதம் பொருளாதார ரீதியான நெருக்கடிகள் மற்றும் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கிறது அதனால் நீங்கள் சற்று பாதுகாப்பாக யோசித்து செயல்படுவது சிறப்பு அது மட்டும் அல்ல உங்கள் கூட இருப்பவர்கள் உங்கள் அமைதியை கெடுப்பதற்கான வழிகளை அதிகம் செய்வார்கள் அதனால் நீங்கள் நிதானமாக செயல்படுவது நல்லது மற்றும் உங்கள் கூட இருக்கக்கூடியவர்கள் உங்களுடன் வேலை செய்யக்கூடியவர்கள் இடம் அனுசரித்து செல்வதும் நல்லது இந்த மாதம் பணவரவு ஏற்றும் இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத பல நன்மைகள் உதவிகள் கிடைக்க பெறுவதால் எதையும் சமாளிக்க கூடிய தைரியமும் தன்னம்பிக்கையும் இந்த மாதம் உங்களுக்கு அதிக அளவு இருக்கும்.