ராகு தசையில் கேது புக்தி ஒரு வருடம், பதினெட்டு நாட்கள்.
கேது புக்தியைப் பற்றி ஜாக்கிரதையாக கவனிக்க வேண்டும். நல்ல பலன்கள்
இந்த காலத்தில் ஏற்பட வேண்டுமானால் கேதுவானவர் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரத்திலிருந்து கொண்டு புதன், சுக்கிரன் பார்வை பெற்றிருந்தாலாவது சாஸ்திர விசாரணை வித்தையில் சிறப்பு, மகான்களுடைய தரிசனமும், அவர்களுடைய ஆசீர்வாதங்களும், ஐஸ்வர்ய விருத்தி வியாபாரத்தில் லாபம் எல்லாம் ஏற்பட்டு
கீர்த்தியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வார்கள். இவ்வாறில்லாமல் கேதுபகவான் ஜனன லக்னத்திறகு
விரயஸ்தானத்திலிருந்து சூரியன் சந்திரன் சம்பந்தமானாலும் பார்வை பெற்றாலும் பலவித தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். கவலைகளும், கஷ்டங்களும் இவர்களைப் பிடிக்கும். வாழ்க்கையில் வெறுப்பு உண்டாக்கூடிய அளவு துன்பங்கள் தொடர்ந்து வந்து வாட்டும்.