இராகு திசையில் சுய புத்தி பலன்கள் / Rahu Thisai suya puthi Palangal in tamil

இராகு திசையில் சுய புத்தி பலன்கள் / Rahu Thisai suya puthi Palangal in tamil 

இராகு தசையில் சுய புக்தி இரண்டு வருடம், எட்டு மாதங்கள், பன்னிரெண்டு நாட்கள். தசாநாதனும். புக்திநாதனும்
ராகுவேயாகையால்
இவருடைய ஸ்தானத்தை நன்றாகக் கவனித்து பலன் சொல்ல
வேண்டும்.
ராகு பகவான் ஜனன கேந்திர
லக்னத்திற்கு ஸ்தானத்திலிருந்தால் சம பலன்களையே தருவார். நல்லதும், கெட்டதும் கலந்து வரும். ஆனால் 6, 8, 12 ஸ்தானங்களில் இருந்தால் இந்த புக்தியுள்ள 2 வருடம், 8 மாதம், 12 நாட்கள் முழுதும் சிலர் வீட்டை விட்டே அநாதைகள் போல் பல இடங்களில் திரிய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் ராகு, தானே தசாநாதனாகவும், புக்தி நாதனாகவும் இருந்து ஸ்தான பேதத்திலிருந்தால் இவ்வளவு கெடுதல்களையும் செய்து விடுவார்.