குரு பகவானுடைய மஹாசக்திக்கு பதினாறு வருஷங்கள். குரு பகவானுடைய கிருபா கடாக்ஷத்தால் பல நன்மைகள். உத்தியோக உயர்வு, சுபகாரியங்கள், லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்க வேண்டும்.
சுய புக்தி இரண்டு வருஷங்கள், ஒரு மாதம், பதினெட்டு நாட்கள் இருக்கின்றன. குரு தேவரே, தசாநாதனாகவும், புக்தி நாதராகவும் இருப்பதால் இவருடைய நிலைமையைக் கொண்டே எல்லா பலன்களும் நடைபெற வேண்டும். குரு தேவர் உச்சம். நட்பு, ஆட்சியில் - திரிகோண குடும்ப ஸ்தானத்தில் இருந்தால் உத்தம சினேகிதங்கள் சேரும் பகவத் பிரார்த்தனைகள் இனிது நிறைவேறும். புத்தி சாதுர்யம் மிகுந்திருக்கும். ஜாதகர் சொன்ன சொல்லுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். வியாபாரத்தில் லாபம், உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.
குரு லக்னத்திற்கு மறைவு பெற்று, ஆனால் ராகு, சனி. கேது இவர்களுடைய சம்பந்தமோ பார்வையோ பெற்றிருந்தால் நஷ்டம், காரணமில்லாத திகில், கடன் தொல்லைகள், இதனால் அவமானங்கள், வஞ்சகர்களின் சூழ்ச்சி எல்லாம் சேர்ந்து உற்சாகத்தைக் குறைத்து கஷ்டப்பட வைக்கும்.