குரு தசையில் கேது புக்தி பதினோரு மாதங்கள், ஆறு நாட்கள்
கேது பகவானுடைய நிலைமையைக் கவனித்தால் இவர் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் முதலிய ராசிகளில் ஏதாவதொன்றில் இருந்து குரு சுக்கிரன் பார்வை
பெற்று ஜனன லக்னத்தில் ஆறாவது இடத்தில் இருந்தாலும், கேந்திர ஸ்தானத்திலிருந்தாலும் தசா நாதனாகிய குரு பகவானுக்கு திரிகோண ஸ்தானத்திலிருந்தாலும் தேவாலய பூஜைகள், செல்வம் பெருகுதல், புத்திரர் சம்பத்து இப்பேர்ப்பட்ட சுப பலன்கள் உண்டு.
புக்தி நாதனாகிய கேது, அங்காரகன், சனி பார்வை பெற்று தசாநாதனாகிய குருவுக்கு மறைவு ஸ்தானத்திலிருந்தால் திருடர்கள் மூலம் நஷ்டம், தரித்திரம், வியாதிகள், பொருள், நஷ்டம், சஞ்சலம் இவைகளுண்டு.