குரு தசையில் புதன் புக்தி இரண்டு வருஷம், மூன்று மாதங்கள், ஆறு நாட்கள் இருக்கும்.
புதன் ஆட்சி, உச்சம், நட்பு திரிகோண லாபஸ்தானாதி பதியாக இருந்து தசாநாதனுக்குத் திரிகோண ஸ்தானத்திலிருந்தால் புத்திசாலித்தனம், விவேகம், முன் யோசனை எல்லாம் இவரிடம் காணப்படும். திரவிய வருமானமும் வேண்டியமட்டில் இருக்கும் பந்து மித்திரர்களுடைய நல்ல உறவும் இருக்கும்.
ஆனால் புக்தி நாதனாகிய புதன் லக்னத்திற்கு 6, 8, 12 ஸ்தானங்களில் நீச ஸ்தானத்திலிருந்து குரு பகவானுக்கு மறைவு ஸ்தானத்திலிருந்தால் வியாபாரத்தில் நஷ்டம், உத்தியோகத்தில் கஷ்டங்கள், ஞாபகக் குறைவு, மீறிய சோம்பல் எல்லாம் ஏற்பட்டு வாழ்க்கையே கெடும்.