குரு மஹா தசையில் ராகு புக்தி நான்கு மாதங்கள் 24 நாட்கள் இருக்கும்.
புக்தி நாதனுடைய நிலைமையைக் கவனித்தால் இவர் மேஷம், ரிஷபம், கடகம், விருச்சிகம், மகர ராசியிலிருந்து தசா நாதனாகிய குரு பகவானுக்கு கேந்திர ஸ்தானத்திலிருந்தால் செல்வங்கள் சேருதல், பந்துக்களின் நல்லெண்ணம், உத்தியோக உயர்வு, குடும்பத்தில் அமைதி, மனச் சாந்தி, சந்தோஷத்தின் அறிகுறிகள் எல்லாம் தென்படும்.
ஆனால் புக்தி நாதனாகிய ராகு நீச்ச ஸ்தானத்திலிருந்தால் சத்ருக்கள் மூலம் பயம், அன்ன வஸ்திரத்திற்கு பஞ்சம் கவலைகள், மனக் கஷ்டம், எல்லாம் ஏற்பட்டு வாழ்க்கையில் புயல் வீசிக் கொண்டேயிருக்கும்.