சந்திரன் தசையில் அங்காரக புக்தி 7 மாதங்கள் இருக்கும். செவ்வாயின் நிலையைக் கண்டுதான் பலன் சொல்ல வேண்டும். செவ்வாய் உச்சம், ஆட்சி, நட்பு முதலிய ஸ்தானங்களில் இருந்தாலும், புதன், குரு. சுக்கிரன், இவர்களுடைய பார்வையிலிருந்தாலும் சரீர சௌக்கியத்திற்கு குறைவில்லை. சுபகாரியங்கள் தடங்கல் இன்றி நடைபெறும். பந்துக்களுடைய சகாயமும் கிடைக்கும். பூமி, வீடு, நிலம், வாகனம் முதலிய சொத்துக்கள் சேரும்.
ஆனால் செவ்வாய் நீசத்திலோ, பகை ஸ்தானத்திலோ இருந்து, சனி, ராகு, கேது இவர்களுடைய பகையைப் பெற்றால் கஷ்டங்கள் நிறைந்திருக்கும். சண்டையும், குழப்பமும், கலகமும் இவர்களுடைய மனதை வாட்டிக் கொண்டேயிருக்கும்.