சந்திரன் திசையில் புதன் புத்தி பலன்கள் / Chandra Thisai puthan puthi Palangal in tamil

சந்திரன் திசையில் புதன் புத்தி பலன்கள் / Chandra Thisai puthan puthi Palangal in tamil 

சந்திரன் தசையில் புதன் புக்தி ஒரு வருடம் 5 மாதங்கள் புதனுடைய ஸ்தானத்தைக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும். புத பகவான் சந்திர பகவானுக்கு கேந்திரத்திலாவது திரிகோணத்திலாவது இருந்தால் திரவிய லாபம் கிட்டும். உல்லாசமான வாழ்க்கை ஏற்படும். எதிர்பார்க்காத இன்பங்கள் குறுக்கிடும். சரீர சுகத்திற்கும் குறைவில்லை.
அவ்வாறில்லாமல் புக்தி நாதனாகிய புதன், நீசத்திலிருந்து இவர் சனி, பகை ராகு இவர்களுடைய பார்வை பெற்றிருந்தாரானால் தரித்திரம் தாண்டவமாடும். கஷ்டங்களும், கவலைகளும், குழப்பங்களும் மனதை சித்ரவதை செய்து கொண்டு வரும். காரணமில்லாமலேயே பயம், திகில் இவைகள் இருந்து கொண்டேயிருக்கும்.
மன சஞ்சலத்திற்கு குறைவேயிருக்காது.