சந்திரன் தசையில் ராகு புக்தி ஒரு வருடம் ஆறு மாதங்களும் நீடிக்கும்.
ராகுவினால் இந்த புக்தியில் நன்மையேற்பட வேண்டுமானால், ராகு பகவான் 3, 6, 10 இந்த ஸ்தானங்கள் ஏதாவதொன்றில் இருந்து சந்திரன், குரு, புதன், சுக்கிரன் இவர்களுடைய பார்வை பெற்றால் எந்த நல்ல காரியத்தைப் பற்றி நினைத்தாலும், தடங்கல் இன்றி சுலபமாக நிறைவேறும். திரவிய லாபமும் உண்டு. குடும்ப உயர்வையும் அடையலாம்.
ஆனால் செவ்வாயானது சனியின் பார்வையைப் பெற்று விட்டாலோ எந்த காரியமும் இனிது நடைபெறாது. கலகங்களும், மனக் கவலைகளும் இவர்களை வருத்திக் கொண்டேயிருக்கும். கெட்ட பலன்களையே இவர்கள் அடைவார்கள்.