இந்த மாதம் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ விநாயகப் பெருமான்
மிதுனம் ராசி ஜூன் மாத ராசி பலன்
மிதுன ராசி நண்பர்களே வணக்கம் உங்கள் ராசிக்கு ஒன்பதில் சனி மற்றும் 11 இல் குரு மற்றும் ராகு சஞ்சரிப்பதால் எதையும் நீங்கள் எதிர்கொண்டு வெற்றி பெற்று ஏற்றங்களை உங்களால் அடைய முடியும். இன்று வரை இருந்த அத்தனை தடங்கல்களும் விலகி சகல விதமான முன்னேற்றங்களையும் உங்கள் வாழ்க்கையில் இந்த மாத மாற்றம் உங்களுக்கு கொடுக்க போகிறது. நீங்கள் நினைத்த காரியங்கள் அத்தனையும் நடக்கும் இந்த மாதத்தில். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள் அதனுடைய திறமை உங்களுக்கு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியும் மற்றும் சுபிட்சமும் உண்டாக அதிக வாய்ப்புகள் உண்டு அது மட்டுமல்லாமல் பொன் பொருள் அதிகளவு வாங்குவதற்கும் வாய்ப்பு உண்டு மற்றும் உங்களுக்கு இருந்த வந்த கடன் பிரச்சினைகள் அத்தனையும் ஓரளவுக்கு குறையப்போகிறது உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் இரண்டில் இருப்பதால் உடன் இருப்பவர்களிடம் பேசும் போது பேச்சு நிதானத்தை நீங்கள் கடைப்பிடிப்பது உங்களுக்கு மிகவும் நல்லது. ஏன்னா சில நேரங்களில் அது உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் மற்றும் சில தேவையில்லாத தொந்தரவுகள் வருவதை தவிர்க்கும்.