இந்த மாதம் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் முருகப்பெருமான்
கடகம் ராசி ஜூன் மாத ராசி பலன் 2023
அன்புள்ள கடக ராசி நண்பர்களே, உங்களுக்கு வணக்கம் உங்களுடைய ஜென்ம ராசியில் சுக்கிரன் இருப்பதாலும் மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் உங்களுக்கு அதிக அளவு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது உங்களுடைய மன சங்கடங்கள் எல்லாம் மறைவதற்கான வாய்ப்புகள் இந்த மாதம் உங்களுக்கு அமையும் அது மட்டும் அல்லாமல் உடல் நலத்தில் கவனம் நீங்கள் செலுத்துவது நல்லது குறிப்பாக மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் இந்த மாத பணவரவு ஓரளவு சிறப்பானதாக உங்களுக்கு அமையும் அது மட்டுமல்லாமல் உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாக கூடிய மாதமாக இந்த மாதம் கடக ராசி நண்பர்களுக்கு இருக்கப் போகிறது.