ராகு புத்தி / Ragu puthi

ராகு புக்தி

சுக்கிரன் மகா தசையில் ராகு புக்தி மூன்று வருடங்களாகும்.


புக்தி நாதனாகிய ராகு ஜனன லக்னத்திற்கு 3, 6, 11 இடங்களில் இருந்து குருபகவானுடைய பார்வை பெற்ற தசாநாதனுக்கு கேந்திர ஸ்தானத்திலிருந்தால் இந்த மூன்று வருடங்களில் பல நன்மைகளும், பொருள் சேர்க்கையும் குடும்ப ஷேமமும் உண்டாகும்.

ஆனால், ராகு பகவான் ஜனன லக்னத்திற்கு அஷ்டம விரய ஸ்தானத்திலிருந்து சனி, சூரியன் பார்வை பெற்று சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானத்திலிருந்தால் விரோதிகளால் கஷ்டங்கள், கலகங்கள், பொருள் நஷ்டம், மன அமைதியின்மை ஏற்படும்.