புதன் புத்தி / puthan puthi

புதன் புக்தி

கேது மஹா தசையில் புதன் புக்திக்கு பதினோரு மாதங்கள் 27 நாட்கள். இதன் பலன்களாவது :


புக்தி நாதனாகிய புதன் ஆட்சி, நட்பு ஸ்தானத்தில் ஜனன லக்னாதிபதியாயிருந்து தசாநாதனுக்கு கேந்திர ஸ்தானத்தில் இருந்தால் சர்வ மங்களம் ; செல்வச் சிறப்பு: கெளரவம், வியாபார மேன்மை,மனைவி மக்கள் சுகம், சுற்றத்தார் மகிழ்வு, மன நிறைவு எல்லா நன்மைகளும் உண்டாகும்.

புதன் பகை நீச்சமாய் சஷ்டாஷ்டம விரயஸ்தானத்திலிருந்தால் மனக்கவலைகள் பந்துக்கள் இறத்தல், தரித்திரம். வியாதி,பீடை, கஷ்டங்களால் புத்தி மாறாட்டம் எல்லாம் ஏற்படும்.