அங்காரக புக்தி
சுக்கிரன் மகா தசையில் அங்காரக புக்தி ஒரு வருடம் இரண்டு மாதங்கள்.
புக்தி நாதனாகிய அங்காரகன் ஆட்சி உச்ச ஸ்தானத்தில் ஜனன லக்னத்திற்கு 3, 6 ஆகிய லாப ஸ்தானத்திலிருந்து
தசாநாதனுக்கு கேந்திர ஸ்தானத்திலிருந்தால் உத்தியோக உயர்வு. எதிர்பாராத செல்வம் சேருதல், குடும்பத்தில் சுப காரியங்கள் நிறைவேறுதல் நண்பர்களின் உதவி எல்லாம் நடைபெறும்.
புக்தி நாதனாகிய அங்காரகன் பகை நீசமாயிருந்து லக்னத்திற்கு அஷ்டம விரய ஸ்தானத்தில் சுக்கிர பகவானுக்கு மறைவு ஸ்தானத்திலிருந்தால் சத்துருக்களால் கஷ்டம். வியாதிகளால் பீடிதம், பொருள் நஷ்டம், காரியங்களில் எல்லாம் ஏற்படும்.
