துலாம் லக்னம் பலன்கள் - Thulam lagnam palangal

துலாம் லக்னம் பலன்கள் - Thulam lagnam palangal

துலாம் என்றால் தராசு ஆயிற்றே. தராசு பிடிக்கும் தொழில் ஏற்படும். தராசு போல் பேசுவார்கள். வியாபாரத்தில் சாமர்த்தியம், புத்திசாலித்தனம், செல்வம் சேர்ப்பதில் கவனம், எதிலும் முன் ஜாக்கிரதையிருக்கும். செல்வங்கள் சேரும். வாழ்க்கையில் சுகங்கள் அனுபவிக்கவும் வாய்ப்பு உண்டு. ஆயுள் நீண்டது என்றே கூற வேண்டும்.


துலா லக்னத்திற்கு புதன், சுக்கிரன், சனி மூவரும் சுபர்கள். சூரியன், செவ்வாய், குரு பாவிகள். சந்திரனும் புதனும் யோககாரர்கள். சந்திரனும், புதனும் கூடியிருந்தால் பிரபலமான யோகத்தைக் கொடுப்பார்கள். சூரியன், குரு மாரகாதிபர்கள். அங்காரகன் தோஷம் உடையவன்.