சூரிய திசை : சுய புத்தி பலன்கள் - suriya thisai : suya puthi palangal
சூரிய மகா தசைக்கு 6 வருஷங்கள். இதில் முதல் முதலாக சூரிய புக்தி வருகிறது. இந்த சுயபுக்தி 4 மாதங்கள் 18 நாட்கள் வரையில் இருக்கும்.
இந்த சுய புக்தியில் தசாநாதனாகிய சூரியன் சுப கிரகங்களோடு சேர்ந்தாவது அல்லது சுப கிரகங்களின் பார்வை பெற்றாவது இருந்தால் சுப காரியங்கள் நடக்கும். ஜாதகர் எவ்வித கஷ்டங்களும் இல்லாமல் சௌக்கியமாக இருப்பார். ஆனால் சனி, ராகு, கேது அவர்களுடைய பார்வை பெற்றாலும் அவர்களோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் அனாவசியமான செலவுகள், எப்போதும் ஏதாவதொரு கவலை, நஷ்டங்களும் குறுக்கிட்டுக் கொண்டேயிருக்கும். தந்தையின் வர்க்கத்தில் ஜீவ நஷ்டம் ஏற்படும். அலைச்சல் மிகுதியாகும்.
