ராகு புத்தி // சூரிய திசையில் ராகு புத்தி பலன்கள் - suriya thisai ragu puthi palangal
சூரிய தசையில் ராகு புக்தி 10 மாதங்கள் 25 நாட்கள்.
ராகு புக்தியில் பலவித நன்மைகள் ஏற்படும், அதற்காக ராகு கேந்திராதிபதியாய் மேஷம், ரிஷபம், கன்னி, மகரம் இந்த ராசிகளில் இருந்தால் பல விதங்களிலும் நன்மை ஏற்படும். செல்வம் சேரும். நினைக்கும் காரியங்கள் எல்லாவற்றிலும் வெற்றியே கிட்டும்., திரும்பிய பக்கமெல்லாம் வெற்றி மேல் வெற்றி. ஆனால், விரய ஸ்தானத்தில் ராகு இருந்து விட்டாலோ எந்த நன்மையும் எதிர்பார்க்க முடியாது. கஷ்ட நஷ்டங்கள் அதிகரிக்கும். வாழ்க்கையே பெருஞ்சுமையாகக் காணப்படும்.
