சூரிய புக்தி
மகா தசையில் சூரிய புக்தி பத்து மாதங்கள், ஆறு நாட்கள் இருக்கும்.
சூரிய பகவான் ஆட்சி, உச்சம் நட்பு ஸ்தானத்திலிருந்து தசாநாதனாகிய புதபகவானுக்கு கேந்திராபதியாய் குருவின் பார்வை பெற்றிருந்தால் புதிதாக பூமி, மனை வாங்க வேண்டிய வசதிகள் ஏற்படும். பொருள் சேர்க்கை, குடும்பத்தில் சுகம். வியாபார விருத்தி, புத்திர சம்பத்து எல்லாம் ஏற்படும்.
ஆனால் புத்தி நாதனாகிய சூரிய பகவான் பகை நீச ஸ்தானத்திலிருந்து தசாநாதனுக்கு மறைவு ஸ்தானத்திலிருந்தால் கஷ்டங்கள் ஒன்றன்பின் மற்றொன்றாய் வரும். நஷ்டங்கள் ஏற்படும். வீண் திகிலால் சுகமே இல்லை என்னும் நிலைமை ஏற்படும்.
