சுக்கிர புக்தி // ராகு மகா திசையில் சுக்கிர புத்தி பலன்கள் - rahu maha thisai sukra puthi palangal

சுக்கிர புக்தி // ராகு மகா திசையில் சுக்கிர புத்தி பலன்கள் - rahu maha thisai sukra puthi palangal 

ராகு மகா தசையில் சுக்கிர புக்தி மூன்று வருடங்கள் இருக்கும்.


சுக்கிரன் கேந்திர திரிகோணலாப ஸ்தான லக்ன வாக்கு ஸ்தானங்களில் இருந்து இராகுவும், கேந்திர ஸ்தானத்தில் இருந்தால் வாழ்க்கையின் பல வகையான இன்பங்களையும் அனுபவிப்பார்கள். சுகபோக பாக்கியங்களையும் பெண்களின் மூலம் இன்பங்களையும் அனுபவிக்க பல அனுகூலமான சூழ்நிலைகள் தானாகவே வந்து அமையும். பல விதங்களிலும் நன்மைகளையும், தொழில்களில் லாபங்களின் பெருக்கையும் காணலாம். இந்த நல்ல யோக பலன்கள் ஏற்பட்டால் வாழ்க்கை சிறந்து விளங்கும்.

ஆனால் சுக்கிரன் ஜனன லக்னத்திற்கு 6, 8, 12லும் தசாநாதனாகிய ராகுவுக்கு விரயஸ்தானத்திலும் இருந்து விட்டால் நேர் விரோதமான பலன்களே கிடைக்கும். ஸ்திரீகளின் சம்பவத்தால் அவர்களின் மூலம் வியாதிகள், ஸ்திரீகளின் விரோதம், பல கஷ்டங்கள், கவலைகள் வந்தடைந்து வாழ்க்கையையே பாழாக்கி விடும்.