சூரிய புக்தி // ராகு திசையில் சூரிய புத்தி பலன்கள் - rahu thisai suriya puthi palangal

சூரிய புக்தி // ராகு திசையில் சூரிய புத்தி பலன்கள் - rahu thisai suriya puthi palangal

ராகு தசையில் சூரிய புக்தி பத்து மாதங்களும் இருபத்து நான்கு நாட்களும் இருக்கும்.

சூரிய பகவானுடைய ஸ்தான பலத்தைக் கவனிக்க வேண்டும். சூரிய பகவான் ஆட்சி, உச்சம், நட்பு ஸ்தானங்களில் இருந்து புதன், குரு, சுக்கிரன் பார்வை பெற்றாலும் சம்பந்தமானாலும் தசாநாதனாகிய ராகுவுக்கு மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் சுப பலன்களைக் கொடுத்து ரக்ஷிப்பார். செல்வம் பெருகும். பந்து மித்திரர்களின் அபிமானத்தைப் பெறுவார்.எல்லா ஐஸ்வர்யங்களையும் பெற்று குடும்பத்தில் சந்தோஷம் நிலவி யோககாரராகவே விளங்குவார்.

ஆனால் சூரிய பகவான் துலாம், மகரம், கும்ப ராசியி லிருந்து தசாநாதனாகிய ராகுவின் சம்பந்தம் பெற்றாலும் அல்லது பார்வை பெற்றாலும் மிகவும் கெட்ட பலன்களைக் கொடுப்பார். நஷ்டங்களுடன் மனம் வெறுத்து குடும்பத்தை விட்டு தேச சஞ்சாரம் செய்ய வேண்டியதாகவும் ஏற்பட்டு விடும்.