சுக்கிர புக்தி // புதன் மகா திசையில் சுக்கிர புத்தி பலன்கள் - puthan maha thisai sukran puthi palangal

சுக்கிர புக்தி // புதன் மகா திசையில் சுக்கிர புத்தி  பலன்கள்  - puthan maha thisai sukran puthi palangal

புதன் மகா தசையில் சுக்கிர புக்தி இரண்டு வருஷங்கள் பத்து மாதங்கள் இருக்கும்.


புக்தி நாதனாகிய சுக்கிர பகவான் ஆட்சி, நட்பு, உச்ச ஸ்தானங்களில் குடும்ப லாபாதிபதியாய் இருந்து தசாநாதனாகிய புத பகவானுக்குத் திரிகோண கேந்திர ஸ்தானத்திலிருந்தால் கீர்த்தி அதிகரிக்கும். பெண்களின் இன்பம் நாட வேண்டியிருக்கும். தாசிகள் சிநேகம், மனோ உற்சாகம், சங்கீத ஞானத்தில் அக்கரை. திரவிய லாபம், குடும்ப சவுக்கியம் எல்லாம் ஏற்பட்டு உல்லாச வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

சுக்கிர பகவான் ஜனன காலத்தில் 6,8, ஆகிய விரய ஸ்தானத்தின் பகை, நீச ஸ்தானத்தில் தசாநாதனாகிய புதனுக்கு மறைவு ஸ்தானத்தில் இருந்தால் அன்ன வஸ்திரத்திற்குக்கூட பஞ்சம் ஏற்பட்டுவிடும். பர ஸ்திரீகளால் பகை, கலக்கம் மனமயக்கம். வியாதிகள், பொருள் நஷ்டம் இவைகளே பலன்களாகும்.