கேது புக்தி // புதன் மகா திசையில் கேது புத்தி பலன்கள் - puthan maha thisai kethu puthi palangal

கேது புக்தி // புதன் மகா திசையில் கேது புத்தி பலன்கள் - puthan maha thisai kethu puthi palangal


புதன் மகாதசையில் கேது புக்தி பதினோரு மாதங்கள் இருபத்தேழு நாட்கள் இருக்கும்.


இந்த புக்தியில் சாஸ்திர விசாரணை, சங்கீதத்தில் பிரியம், ஈடுபாடு. வித்தையை அபிவிருத்தி செய்து கொள்வது குடும்ப சௌக்கியம், பொருள் சேர்க்கை, எல்லாம் ஏற்ப வேண்டுமானால், புக்தி நாதனாகிய கேது பகவான் லக்னத்திற்கு கேந்திர ஸ்தானத்திலிருந்து குரு, சுக்கிர பார்வை பெற்ற மேஷம், ரிஷபம், கடகம், விருச்சிகம், மகர ராசியிலிருந்து தசாநாதனுக்கு கேந்திர ஸ்தானத்தில் இருக்க வேண்டும்.

இவ்வாறு இல்லாமல் கேது பகவான் தசாநாதனுக்கு மறைவு ஸ்தானத்திலிருந்து சனி பகவானுடைய பார்வை பெற்றால் கைப்பொருள் சேதம். விஷஜந்துக்களால் துன்பம், மறதி, மனக்கவலை சூழ்ந்து கொள்ளும்.